கர்நாடக மக்களை அவமானப்படுத்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா மன்னிப்பு கோர வேண்டும் என BS எடியூரப்பா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக - மகாராஷ்டர எல்லைப் பகுதியான பெல்காவியில் இரண்டு தினங்களுக்கு முன்னாதாக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டது. இந்த கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா மாராத்தி மொழியில் பேசாததிற்கு என்னை மன்னித்து விடுங்கள் என கேட்டுக்கொண்டார். 


மராத்தி மக்கள் அதிகம் உள்ள பகுதியில் மராத்தி மொழியில் பேசாமல் இருந்தது, கர்நாடக மக்களை அவமதிப்பது போன்றதாகம். அதேவேலையில் கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கை புத்தகத்தில் மராத்தி மொழியில் ஏதும் குறிப்பிடபடவில்லை எனவும், இக்கூட்டத்தின் போது சித்தராமையா அவர்கள் மராத்தி மொழியில் பேசாமல் மராத்தியர்களை எதிரிகள் போல் பாவித்தது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவித்தாவது.... வெற்றி பெருவோம் என நம்பிக்கை கொண்டிருந்தால் சித்தராமையா சாமுன்டேஷ்வரி தொகுதியில் மட்டும் போட்டியிட்டு இருக்கலாம், தோல்வி பயத்தில் காரணமாகவே அவர் பதாமி தொகுதியிலும் போட்டியிடுகின்றார் என தெரிவித்துள்ளார்.


கர்நாடகா தேர்தல் 2018...


  • வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் - ஏப்ரல் 17

  • வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 24

  • கர்நாடக தேர்தல் - மே 12, 2018

  • வாக்கு எண்ணிக்கை - மே 15, 2018

  • 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.