பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் ஹாலப் - முகுருசா பலபரிட்சை!
ஸ்பெயின் நாட்டு டென்னீஸ் வீராங்கனை கார்பைன் முகுருசா பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதிக்கு முன்னேறினார்!
ஸ்பெயின் நாட்டு டென்னீஸ் வீராங்கனை கார்பைன் முகுருசா பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதிக்கு முன்னேறினார்!
பிரெஞ்சு நாட்டின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறதி போட்டியில் 3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, 28-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை எதிர்த்து விளையாடினார்.
மிகவும் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் முகுருசா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
இதேப்போல் மற்றொரு கால் இறுதி போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 12-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை வீழ்த்தினார்.
இதனையடுத்து அரை இறுதி போட்டியில்யில் சிமோனா ஹாலப் - கார்பைன் முகுருசா மோதவுள்ளனர்.