வைரல் வீடியோ: இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். இணையத்தில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களே பெரும்பாலும் அதிகமாக இருக்கின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் பரவலாக பார்க்கப்பட்டு பகிரப்படுகின்றன. சில நேரங்களில் இந்த வீடியோக்களை பார்ப்பது வேடிக்கையாகவும், சில சமயங்களில் மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் தற்போது மலைப்பாம்பின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி இந்த சம்பவம் ராம்பூர் சௌக் அருகே உள்ள பழக்கடையில் நடந்துள்ளது. அதன்படி அங்கு உள்ள ஒரு வீட்டில் இருந்து மலைப்பாம்பு மற்றும் நாகப்பாம்பு பிடிபட்டன. இந்த பாம்புகள் டிராகன் பழ அட்டையில் ஒளிந்து கொண்டிருந்தது. அதேபோல் நாகப்பாம்பு மூன்று நாட்களாக வீட்டில் ஒளிந்துக்கொண்டு இருந்தது.


மேலும் படிக்க | Viral video: ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நாகம்! 


தகவலின்படி, கிரெனேடியர்ஸ் ரெஜிமென்டல் சென்டர் ஜிஆர்சி ராம்பூர் அருகே சந்தீப்பின் பழக்கடை உள்ளது. வாடிக்கையாளர்கள் பழங்கள் வாங்க வந்தபோது சந்தீப் கடையில் இருந்தார். பழத்தைப் பிரித்தெடுக்க பேப்பர் அட்டைப்பெட்டியில் கையை வைத்தபோது அதில் பாம்பு அமர்ந்திருப்பது புரிய வெகுநேரம் ஆகவில்லை. கார்ட்டூனுக்குள் இருந்த மொபைல் டார்ச்சைப் பார்த்தபோது, ​​அதில் மலைப்பாம்பு ஒன்று அமர்ந்திருப்பதைக் கண்டார். உடனடியாக இந்த சம்பவம் குறித்து ஜபல்பூர் விலங்குகள் நலச் சங்க உறுப்பினர்களிடம் அவர் தெரிவித்தார். சங்க உறுப்பினர்கள் அங்கிதா பாண்டே, சந்தேஷ் திவாரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் வன அதிகாரிகள் அந்த பாம்பை மீட்டு காட்டில் விட்டனர்.


பழப்பெட்டியில் அமர்ந்திருந்த பாம்பின் வீடியோவை இங்கே காணலாம்



அதேபோல் மற்றொரு சம்பவம் ரத்தன் நகரில் நடந்துள்ளது. அதன்படி கே.கே.அஹிர்வார் என்பவரது வீட்டில் இருந்து சுமார் ஐந்தடி நீளமுள்ள நாகப்பாம்பு பிடிபட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் அஹிர்வார் உறுப்பினர்களின் பார்வை நாகப்பாம்பின் மீது விழுந்ததாகவும், அதன் பிறகு அது வீட்டிலேயே எங்கோ மறைந்ததாகவும் இருந்தது. சுமார் மூன்று நாட்களுக்கு பின் வீட்டின் சமையலறையில் அந்த நாகப்பாம்பு அமர்ந்திருப்பதைக் கண்டார், அதன் பிறகு அஹிர்வார் பாம்பு நிபுணர் பண்டிட் கஜேந்திர துபே சாஸ்திரியிடம் சம்பவம் குறித்து தெரிவித்தார். இந்த சம்பவ இடத்திற்கு வந்த பண்டிட் துபே, நாகப்பாம்பை மீட்டு பிடித்து காட்டில் விட்டனர்.


இந்த வினோத நிகழ்வின் வீடியோ தற்போது சமூக ஊகடங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.


மேலும் படிக்க | தங்கையின் முதல் நடையால் பூரிப்படைந்த குட்டி அண்ணன்: நெட்டிசன்கள் பாராட்டும் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ