தங்கையின் முதல் நடையால் பூரிப்படைந்த குட்டி அண்ணன்: நெட்டிசன்கள் பாராட்டும் வைரல் வீடியோ

Emotional Viral Video: தங்கையை நம்ப முடியாமல் பார்க்கும் அண்ணன்!! அப்படி என்னதான் நடந்தது என்ன? வைரல் ஆகியுள்ள இந்த வீடியோவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 31, 2022, 04:41 PM IST
  • முதன்முதலாக நடந்த குழந்தை.
  • பார்த்து பரவசமான குட்டி அண்ணன்.
  • வைரலான வீடியோ.
தங்கையின் முதல் நடையால் பூரிப்படைந்த குட்டி அண்ணன்: நெட்டிசன்கள் பாராட்டும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: குழந்தைகள்தான் குடும்பங்களின் உண்மையான செல்வங்கள். இவர்கள் வீட்டில் உள்ள அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவர்கள். சிறு குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும், சிறிய மற்றும் பெரிய குறும்புகளையும் பார்த்து நாம் சிரித்து மகிழ்கிறோம், குதூகலமாக கொண்டாடுகிறோம். ஒரு குழந்தை முதல் முறையாக தனது கால் கொண்டு நடக்கத் துவங்கும் அந்த தருணம் அவரது பெற்றோருக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும். ஆனால், பெற்றோர் மட்டுமல்ல, குழந்தையின் அண்ணா, அக்கா என உடன் பிறந்தவர்களுக்கும் இது ஒரு அற்புதமான தருணமாகத்தான் இருக்கும். 

சமீபத்தில் இது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில், ஒரு சிறுவன் தனது தங்கை தனது கால்களால் முதன் முதலாக நடப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறான். அந்த சிறுவனால் தன் தங்கை முதன்முதலாக நடப்பதை பார்த்து நம்ப முடியவில்லை. சந்தோஷத்தின் உச்சத்திற்கு செல்கிறான். 

தங்கை நடப்பதை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட சிறுவன்

நவ் திஸ் நியூஸ் என்ற பெயரில் ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் கேப்ஷனில், 'தனது தங்கை முதன்முறையாக நடந்து செல்வதை பார்த்து, அவரது அண்ணன் காட்டும் இனிமையான ரியாக்ஷன்' என எழுதப்பட்டுள்ளது. அண்ணன் தங்கை உறவின் பிரிக்க முடியாத பிணைப்பு வீடியோவில் காணப்படுகிறது.

மேலும் படிக்க | Viral Video: புலியின் காதை திருகி சீண்டும் குரங்கு; கடுப்பான புலி! 

இதயத்தை வெல்லும் வீடியோ

வைரலான இந்த வீடியோவில், ஒரு சிறு குழந்தை தன் அண்ணனின் அருகில் அமர்ந்துள்ளதை காண முடிகின்றது. திடீரென அந்த குழந்தை எழுந்து நின்று தானாக நடக்கத் தொடங்குகிறது. அதைக் கண்டு குழந்தையின் அண்ணனுக்கு மிகவும் வியப்பாக உள்ளது. குழந்தையின் அண்ணனும் ஒரு சிறுவன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சிறுவனின் முகத்தில் உள்ள வெளிப்பாடுகள் அவனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. 

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செய்தி எழுதும் வரை இந்த வீடியோ சுமார் 43 ஆயிரம் வியூஸ்களைப் பெற்றுள்ளது. இதில் பயனர்கள் தங்கள் அழகான கமெண்டுகளையும் பதிவிட்டு வருகிறார்கள். 

மேலும் படிக்க | பந்தா காட்டிய மணமகள், மேடையில் மாப்பிள்ளை செய்த வேலை: வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News