Halloween விழாவிற்காக தலை துண்டாக்கப்பட்ட ஆன்மாவினை போல் வேடமணிந்து வரும் 2 வயது குழந்தை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானுக்குவே நகரத்தை சேர்ந்தவர் கிரிஸ்டல் ஹவாங். சமீபத்தில் Halloween கொண்டாட்டம் உலகமெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த விழாவிற்கு தனது மகள் மாயா-வையும் விச்சியாசமான தோற்றத்தில் அளங்கறிந்துள்ளார். இந்த தோற்றம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம் இந்த விசித்திர தோற்றத்தில் வலம் வரும் சிறுமி தனது தலையை தனியே வெட்டி தனது கையில் எடுத்து வருவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.



இந்த வீடியோவினை கிரிஸ்டல் ஹவாங் தனது சமூக ஊடக பங்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் தலையிழந்த சிறுமியாக 2-வயது மாயாவும், அவரது தலை வெட்டிய கசாப்பு கடை உரிமையாளராய் அவரது 6-வயது சகோதரி சார்ளி இடம்பெற்றுள்ளனர்.


இந்த வீடியோவானது இதுவரை 18 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் பல லைக்ஸ்களை பெற்று வருகிறது. Holloween பண்டிகைக்கு ஏற்ற ஆடை இது என சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து, குழந்தைகளையும் பாராட்டி வருகின்றனர்.