சுகப்பிரசவத்தில் 6 பெண், 1 ஆண் என ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஒரு பெண்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் நடந்த பிரசவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுகப்பிரசவம் என்றாலே அதிசயமாக பார்க்கும் இன்றைய காலகட்டத்தில் கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் 25 வயது பெண் ஒருவர் 7 குழந்தைகளை பெற்றுள்ளார். ஒரே பிரசவத்தில் 6 பெண், 1 ஆண் என 7 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 


சமீபத்தில் பிரசவத்துக்காக ஈராக் மருத்துவமனை ஒன்றில் அந்த பெண்ணை அவரது கணவர் அனுமதித்துள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு அப்பெண்ணுக்கு அழகான 6 ஆண், 1 பெண் உள்ளிட்ட 7 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிறந்தது. பிரசவத்துக்கு பின் அனைத்து குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்  அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.



இதுகுறித்து, குழந்தைகளின் தந்தை கூறுகையில், இனியும் குழந்தை பெறும் எண்ணம் இல்லை. இவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் என்பது உலகில் இது இரண்டாவது முறையாகும்.


இதற்குமுன் 1997 -ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. கென்னி-பாப்பே தம்பதிக்கு 4 ஆண், 3 பெண் உட்பட 7 குழந்தைகள் பிறந்தது. கடந்த நவம்பர் மாதம் இவர்கள் 7 பேரும் தங்களது 21 -வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.