புவனேஸ்வர்: படிப்பதற்கு வயது ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை உணர்த்த அவ்வப்போது பலர் நம் கண்கள் முன்னால் உதாரணமாகத் தோன்றுகிறார்கள். ஒடிசாவின் ஜெய் கிஷோர் பிரதான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் NEET தேர்வில் தேர்ச்சி பெற்று அந்த மாநிலத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற மற்ற மாணவர்களைப் போல முதலாண்டு MBBS படிப்பில் சேர்ந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் என்ன அதிசயம் என கேட்கிறீர்களா? அவருக்கு வயது 64 என்பதும் அவர் ஒரு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி என்பதும்தான் அதிசயம். ஆம்!! பள்ளிப்படிப்பை பயிலும் இளவயது மாணவர்களே ஒரு சவாலாக எண்ணும் NEET தேர்வில், 64 வயதான, பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஜெய் கிஷோர் பிரதான் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.


ஜெய் கிஷோர் பிரதானின் இந்த சாதனை இந்தியாவின் (India) மருத்துவக் கல்வி வரலாற்றில் ஒரு அரிய நிகழ்வு என்று விவரிக்கப்படுகிறது. தான் உயிருடன் இருக்கும் வரை மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக பிரதான் கூறுகிறார்.


முன்னாள் SBI அதிகாரியான பிரதான், புதன்கிழமை அரசு நடத்தும் வீர் சுரேந்திர சாய் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஊனமுற்றோர் இட ஒதுக்கீடு பிரிவில் அனுமதி பெற்றார்.


ALSO READ: Viral News: விபத்தில் சிக்கிய யானையின் உயிரை CPR மூலம் மீட்டெத்த மீட்புப் பணியாளர்


"இது நாட்டின் மருத்துவ கல்வி வரலாற்றில் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த வயதில் மருத்துவ மாணவராக சேர்ந்து பிரதான் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்” என்று விம்சார் இயக்குனர் லலித் மெஹர் கூறினார்.


அதிகபட்ச வயது வரம்பில்லாத தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) பிரதான் செப்டம்பர் மாதம் ஆஜரானார். இந்த தேர்வில் ஒரு நல்ல ரேங்கைப் பெற்று அவர் VIMSAR-க்கு தேர்ச்சி பெற்றார்.


தனது இரட்டை மகள்களில் ஒருவரின் சமீபத்திய மரணம், தனக்கு NEET தேர்வை எழுதி MBBS படித்து மருத்துவராக சேவை செய்யும் ஊக்கத்தை அளித்தது என்று பர்காரில் வசிக்கும் அவர் கூறினார்.


ஜெய் கிஷோர் பிரதான் MBBS படிப்பை முடிக்கும்போது அவருக்கு 70 வயதாகிவிடும். ஆனால், தன்னைப் பொறுத்தவரை, வயது என்பது ஒரு எண்ணிக்கைதான் என்று பிரதான் கூறுகிறார். “எனக்கு இதில் பணம் சம்பாதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை. நான் உயிரோடு இருக்கும் வரை அனைவருக்கும் சேவை செய்ய விரும்புகிறேன்” என்கிறார் இந்த 64 வயது இளைஞர்!! 


ALSO READ: வேலை போன இந்தியருக்கு Dubai Lucky Draw-வில் அடித்தது அதிர்ஷ்டம்: ரூ.7 கோடி வென்றார்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR