வேலை போன இந்தியருக்கு Dubai Lucky Draw-வில் அடித்தது அதிர்ஷ்டம்: ரூ.7 கோடி வென்றார்

நவநீத் கடந்த 4 ஆண்டுகளாக அபுதாபியில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆனால் COVID-19 நெருக்கடிக்கு மத்தியில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 21, 2020, 07:43 PM IST
  • வேலை கைவிட்டாலும் சஜீவனை அதிர்ஷ்டம் கைவிடவில்லை.
  • துபாயில் ஒரு லக்கி டிரா மூலம் கோடீஸ்வரரானார் சஜீவன்.
  • சஜீவன் தனது மனைவி மற்றும் ஒரு வயது மகனுடன் துபாயில் வசித்து வருகிறார்.
வேலை போன இந்தியருக்கு Dubai Lucky Draw-வில் அடித்தது அதிர்ஷ்டம்: ரூ.7 கோடி வென்றார் title=

ஒரே இரவில் எதிர்பாராத வகையில் வாழ்க்கை எவ்வாறு மாறக்கூடும் என்று யாராலும் கணிக்க முடியாது! நாம் எதிர்பாராத போது துன்பம் நம்மை சூழ்ந்துகொள்வதும், இன்பம் வந்து ஆட்கொள்வதும் அனைவரது வாழ்க்கையிலும் பலமுறை நடப்பதுதான். ஆனால், சில சமயங்களில் நடக்கும் சில சம்பவங்கள் நமக்கு மிக அதிக அளவிலான ஆச்சரியங்களை அளிக்கின்றன.

சில நாட்களுக்கு முன்பு, COVID-19 தொற்று காரணமாக ஏற்பட்ட சிக்கலான நிலையினால், தன் வேலையை இழந்த 30 வயதான நவநீத் சஜீவன் மிக மும்முரமாக வேலை தேடிக்கொண்டிருந்தார். ஆனால், திடீரென்று அவர் ஒரு கோடீஸ்வரராகி விட்டார்!

ஆமாம், கேரளாவின் (Kerala) காசர்கோடைச் சேர்ந்த சஜீவன் துபாயில் (Dubai) வசித்து வருகிறார். துபாய் டூட்டி ஃப்ரீ ரேஃபிள் அதிர்ஷ்ட குலுக்கலில் அவர் ரூ .7.3 கோடியை வென்றுள்ளார்.

நவநீத் கடந்த 4 ஆண்டுகளாக அபுதாபியில் (Abu Dhabi) ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆனால் COVID-19 நெருக்கடிக்கு மத்தியில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவரது நோட்டீஸ் பீரியட்டில் அவர் வேலை செய்து வருவதாக ஒரு வளைகுடா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ALSO READ: ஹேர்கட்டால் தெருவில் சுற்றித்திரிந்த நபரின் வாழ்கையில் நடந்த ட்விஸ்ட்!

அவர் ஒரு வேலை நேர்காணலுக்குச் சென்று வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​ஞாயிற்றுக்கிழமை டி.டி.எஃப்-ல் இருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைத்தவர் அவர் பெற்ற மில்லியன் டாலர் வெற்றியைப் பற்றி அவருக்கு அறிவித்தார். நவம்பர் 22 ஆம் தேதி சஜீவன் அந்த குலுக்கலுக்கான டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கியிருந்தார்.

இதைக் கேட்ட சஞ்சீவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மிக விரைவாக, தான் தனது டிக்கெட் செலவைப் பகிர்ந்து கொண்ட தனது நான்கு சகாக்கள் மற்றும் நண்பர்களுடன் இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

“என் மனைவி இன்னும் இங்கே வேலை செய்கிறார். எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லை என்றால் நாடு திரும்ப நான் திட்டமிட்டிருந்தேன். எனக்கு சுமார் 100,000 திர்ஹாம் கடன்கள் உள்ளன. இந்த வெற்றி அவற்றை அடைக்க உதவும்” என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சுவாரஸ்யமாக, டி.டி.எஃப் மில்லினியம் மில்லியனர் டிக்கெட் வாங்குபவர்களில் இந்தியர்களின் (Indians) எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பது வழக்கம். 1999 இல் மில்லினியம் மில்லியனர் குலுக்கல் தொடங்கியதிலிருந்து 1 மில்லியன் டாலர்களை வென்ற 171 வது இந்தியராவார் சஜீவன்.

சஜீவன் கலீஜ் டைம்ஸிடம், “வழக்கமாக, நான் எப்போதும் அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரிகளை வாங்குவேன். நான் மூன்று ஆண்டுகளாக அந்த டிக்கெட்டுகளை வாங்குகிறேன். இந்த முறை இதற்காக இரண்டு மாதங்களாக சேமித்து வைத்து நான் முதல் முறையாக துபாய் டூட்டி ஃப்ரீ டிக்கெட்டை வாங்கினேன்" என்று கூறினார்.

சஜீவன் தனது மனைவி மற்றும் ஒரு வயது மகனுடன் துபாயில் வசித்து வருகிறார்.

ALSO READ: இரண்டு வெவ்வேறு பெண்களின் வயிற்றில் பிறந்த 'இரட்டை' சகோதரிகள்: எப்படி சாத்தியம்?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News