உடைந்த நாற்காலி..பென்ஷன் பெற உச்சி வெயிலில் நடந்து செல்லும் மூதாட்டி: வீடியோ
Odisha Viral Video: ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் பென்ஷன் பணம் வாங்குவதற்காக உச்சி வெயிலில் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
ஒவ்வொரு நாளும் நாம் சமூக ஊடகங்களில் புதிய வீடியோக்களை பார்க்கிறோம். இந்த வீடியோக்கள் சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. அதேபோல தற்போது பாட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 70 வயது மூதாட்டி ஒருவர் ஓய்வூதியம் பெறுவதற்காக உடைந்த நாற்காலியுடன் சாலையில் வெறுங்காலுடன் நடந்து சென்றுள்ளார். மாவட்டத்தின் ஜரிகன் தொகுதியில் உள்ள பனுகுடா கிராமத்தைச் சேர்ந்த அந்த வயதான பெண் சூர்யா ஹரிஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வீடியோவில் காணப்படும் மூதாட்டி, மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் போல் தெரிகிறது. இவரது மூத்த மகன் வேறு மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது அந்த மூதாட்டி தனது இளைய மகனின் குடும்பத்துடன் தங்கியுள்ளார். ஓய்வூதியத்தை வாங்குவதற்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் படிக்க | குட்டி நாய்க்கும் குரங்குக்கும் செம சண்டை: ஜெயிச்சது யார்? வைரல் வீடியோ
மேலும் இந்த வீடியோ தொடர்பாக SBI வங்கியின் மேலாளர் கூறுகையில், மூதாட்டியின் விரல்கள் உடைந்ததால் பணத்தை எடுப்பதில் சிக்கலை எதிர்கொள்வதாகவும், சிக்கலை தீர்க்க வங்கி செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அவருடைய விரல்கள் உடைந்துள்ளன, அதனால் அவர் அவரது பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அக்கவுன்டில் உள்ள சிக்கலை விரைவில் தீர்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ ANI செய்தி நிறுவனம் பகிர்துள்ளது. இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும், தங்களின் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | சிறுத்தையை சின்னா பின்னமாக்கி விழுங்கிய மலைப்பாம்பு: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ