காதல் என்பது அன்பின் அடிப்படையில் ஏற்படும் உணர்வு. ஆனால் அன்பையும் இடம் பொருள் என சமய சந்தர்ப்பம் பார்த்து வெளிப்படுத்துவது நாகரீகமாக இருக்கிறது. ஆனால், காதலி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய பட்டியலை காதலன் கொடுத்தால் என்னவாகும்? அதற்கு உதாரணம் இந்த வைரல் சம்பவம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு பெண் தனது காதலன் தனக்கு கொடுத்த 11 விதிமுறைகளை சமூக வலைதளங்களில் பகிரங்கமாக பகிர்ந்துள்ளார். அந்த சட்டங்களைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


ஒரு உறவில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஆரோக்கியமான இடைவெளி இருப்பது மிகவும் முக்கியம். ஒருவருக்கு இது இல்லாதிருந்தால், அவரால் தன்னுடைய காதலை தக்கவைப்பது கடினம். அமெரிக்காவில் உள்ள கரோலின் என்ற பல்கலைக் கழக மாணவியின் காதலன் அவருக்கு 11 காதல் விதிமுறைகளை வகுத்தார்.


ALSO READ | நடுரோட்டில் மிக உற்சாகமாக நடனம் ஆடிய புதுமணத் தம்பதிகள்


தனது காதலன் கொடுத்த 11 விதிமுறைகளையும் அந்தப் பெண் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த விதிமுறைகளை படித்துப் பார்த்த நெட்டிசன்கள் திகைத்துப் போனார்கள்.


தனது காதலனின் ஆதிக்கத் தன்மையைப் பற்றி கரோலின் சமூக ஊடகங்களில் பேசினார், கல்லூரிக்கு செல்லும்போதும் கரோலின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருந்தது என்று மிரர் இங்கிலாந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.


கரோலின் தனது காதலன் வகுத்த விதிகளின் ஸ்கிரீன் ஷாட்டை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். தனது காதலி, என்ன உண்பது, எதை குடிப்பது என்று கட்டுப்பாடுகள் விதித்த காதலன், காதலியின் உணவு விருப்பங்களில் மட்டுமல்ல, இறுக்கமான ஆடைகளை அணியவும் தடை விதித்தான். அதுமட்டுமல்ல, மதுவைத் தொடக்கூடக்கூடாது என்றும் காதலன் விதிமுறைகளை வகுத்திருந்தார்.


ஒரு நவீன காதலனின் பழமையான சிந்தனைகளின் தொகுப்பாகவே இருக்கும் அந்த விதிமுறைகளின் பதிவுதான், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
மில்லியன் கணக்கானவர்கள் இந்த பதிவை பார்த்துள்ளனர்.


Also Read | Vaccine Camp: தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி


கரோலின் எங்கிருக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்வதற்காகவும் காதலன் ஒரு விதியை வகுத்தார். அதாவது காதலில் கரோலின் ஸ்னாப்சாட்டில் தனது இருப்பிடத்தை காண்பிக்கும் தெரிவை எப்போதுமே மூடக்கூடாது. அதுமட்டுமல்ல, கரோலின் வேறு எந்த இளைஞர்களுடனும் பேசக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்தார். அதுமட்டுமல்ல, காதலன் கொடுத்த மோதிரத்தை ஒருபோதும் கரோலின் கழற்றக்கூடாது என்பதும் காதல் சட்டங்களில் ஒன்றாக இருந்தது.
 
இவற்றைத் தவிர, கரோலின் இரவு 9 மணிக்குள் தனது விடுதி அறைக்குத் திரும்ப வேண்டும் இறுக்கமான உடை அணியவோ அல்லது பார்ட்டிகளில் கலந்து கொள்ளவோ கரோலினை அவரது காதலன் அனுமதிக்கவில்லை.


காதலன் உருவாக்கிய விதிகளை கரோலின் தினமும் பின்பற்ற வேண்டும். இந்த காதல் கட்டுப்பாடுகளைப் பற்றி கரோலின் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தாலும், 
அவருடனான உறவை முடிவுக்கு கொண்டுவர நினைப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று இறுதியாக சொல்லியிருப்பதுதான் ஹைலைட்…


READ ALSO | அந்தரங்க உறுப்பை அளக்கும் விபரீத ஆசையில், ‘உள்ளே’ சிக்கிக் கொண்ட USB கேபிள்; நடந்தது என்ன..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR