கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் மனைவி செய்த தவறின் விலை என்ன?
கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் சமூக ஊடகங்களில் பரவலாக புகழ் பெற்றுள்ளார்
புதுடெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் சமூக ஊடகங்களில் பரவலாக புகழ் பெற்றுள்ளார். குறிப்பாக அவர் தனது குடும்பத்துடன் இணைந்து, சீன வீடியோ செயலியான டிக்டேக்கைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் சூப்பர்ஸ்டார் குடும்பம் என்பதை நிரூபித்து வருகிறார்.
டேவிட் வார்னரும் அவரது மனைவியும் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் பஞ்சாபி பாடல்களை டிக்டாக் வீடியோக்களாக உருவாக்கி பகிர்கின்றனர். வார்னர் தனது வீடியோக்களை தனது பிற சமூக ஊடக கணக்குகளிலும் பகிர்ந்துகொள்கிறார். வார்னரின் மனைவி கேண்டி வார்னரும் (Candy Warner) டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். இப்போது இந்த தம்பதிகள் பதிவேற்றியுள்ள ஒரு வீடியோவில் கேண்டி வார்னர் செய்த ஒரு தவறான செயலைப் பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.
Read Also | 10,000 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களைக் கோரும் டெல்லி
இதுதான் கடைசி என்று கூறும் திருமதி வார்னர், கணவருக்கு வார்னிங் கொடுக்கிறார்
வீடியோவில், கேண்டி ஒரு அளவு நாடாவை (Measure Tape) எடுத்து டேவிட்டை அளவிட முயற்சிக்கிறார். அப்போது அந்த அளவு நாடாவின் முனை தவறுதலாக கேண்டியின் கையில் இருந்து தவறி, அது டேவிட் வார்னரின் பிறப்புறுப்பில் விழுகிறது. எதிர்பாராத நாடாத் தாக்குதலால் வார்னர் நிலைகுலைகிறார். அதில் அவர் வலியில் கூச்சலிடுவதும் தெரிகிறது. டேவிட் வார்னர் இந்த வீடியோவை பகிர்ந்துக் கொள்ளும்போது, கோபமாக இருப்பது போன்ற இமோஜியையும் பகிர்ந்துவிட்டு, 'உங்கள் மனைவி புதிய டிக்டேக்கை உருவாக்க முயற்சிக்கும்போது, உங்களுக்கும் இவ்வாறு நடக்கலாம் என்று எழுதியுள்ளார்.
அதுமட்டுமல்ல, இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வார்னர், இருவரும் சிரிக்கும் இமோஜிகளைப் பகிர்ந்து கொண்டார். அதோடு, "கடைசியாக நான் உன்னை நம்பினேன், கேண்டி வார்னர்" என்று எழுதி, தனது குறும்புத் தனத்தையும் காட்டியுள்ளார். 'Not Happy', 'No More Kids' ஹேஷ்டேக்குகளை தம்பதிகள் பகிர்ந்து கொண்டு, அதில் சிரிக்கும் இமோஜிகளையும் பதிவிட்டுள்ளனர்.
Read Also | 174 கோடி ரூபாய் செலவில் 6 ஆண்டுகளாக நாசா கட்டிய கழிப்பறையின் சிறப்பம்சம் என்ன?
கணவருக்கு பதிலளிக்கும் விதமாக, கேண்டி தனது இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை எழுதி, 'Sorry, no sorry' என்று எழுதினார். அதாவது, மன்னிக்கவும், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கணவருக்கு குறும்பு பதிலை கொடுத்துள்ளார். டேவிட் அதை உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டு, 'எனது ஆடைகளை அழுக்கு செய்து கேண்டியை பழிவாங்கி விட்டேன்' என்று பதிவிட்டுள்ளார். இதில் இருவரும் சேர்ந்து சிரிக்கும் இமோஜியை பதிவிட்டுள்ளார் வார்னர். வார்னரின் இந்த வீடியோவை 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.
ஐபிஎல் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், சில நாட்களுக்கு முன்பு 'ஷீலா கி ஜவானி' என்ற கத்ரீனா கைஃப்பின் பிரபலமான இந்தி பாடலின் வீடியோவை தனது மகளுடன் இணைந்து ஆடி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவும் மிகவும் வைரலானது. தனது மனைவியுடன், பாலிவுட்டின் பிரபல கதாநாயகன் ஜிதேந்திராவுக்கு ஜம்பிங் ஜாக் என்ற புனைப்பெயரைக் கொடுத்த பிரபலமான பாடல்களுக்கும் வார்னர் டிக்டாக் தயாரித்துள்ளார். 20 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் டிக்டாக் செயலியில் வார்னரை பின்தொடர்கின்றனர். வார்னரின் அனைத்து வீடியோக்களுக்கும் இதுவரை இரண்டரை கோடிக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.