ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பெய்த கனமழையால் கார் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் பயங்கர வீடியோ வெளியாகியுள்ளது. ட்விட்டரில் ANI வெளியிட்டுள்ள வீடியோவில், மழைநீரின் கரை புரண்டு ஓடிய நிலையில், சாலையில் கார்  அடித்து செல்லப்படுவதைக் காணலாம். அந்த காணொளியில் மற்றொரு கார் வெள்ளி நீரில் வேகத்தை சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும், பின்னர் அந்த காரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோத்பூரில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,  மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார். ஜோத்பூரில் பெய்த கனமழையால் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். "கனமழை காரணமாக ஜோத்பூரில் (ராஜஸ்தான்) நான்கு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி" என்று பிர்லா ட்வீட் செய்துள்ளார்.


அதிர்ச்சி அளிக்கும் வீடியோவை கீழே உள்ள ட்விட்டர் பதிவில் காணலாம்:



மேலும் படிக்க | Viral News: ₹3,419 கோடி மின்சார பில் கொடுத்த ஷாக்; மயங்கி விழுந்த வீட்டு உரிமையாளர்


திங்களன்று, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ராஜஸ்தானில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது. தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் சுற்றுப்புறங்களில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதாக வானிலை அறிக்கை கூறுகிறது. 


மேலும் படிக்க | Viral Video: விமானத்தில் வழங்கிய உணவில் ‘பாம்பின் தலை’; அதிர்ச்சியில் உறைந்த பணிப்பெண்


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வெளியான பகீர் தகவல்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ