ஆட்டோ ரிக்ஷாவின் மேல் அமர்ந்து மூன்று மாணவர்கள் பயணித்ததை காட்டும் வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், 11-13 வயதுக்குட்பட்ட 3 மாணவர்கள், ஆட்டோவின் மேல் அமர்ந்து பயணிப்பதை கேமராவில் ஒருவரு பதிவு செய்து, சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ‘அடையாளம் தெரியாத டிரைவர் மீது பரேலியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை பலர் விமர்சித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டர் பயனர் ஒருவர், வீடியோவைப் பகிர்ந்து கொண்டு , “இவ்வளவு கவனக்குறைவான ஆட்டோ ஓட்டுநரை நம்பி எப்படி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும். உ.பி.யின் பரேலியில் நடந்த சம்பவம் இது. இந்த ஆட்டோ வெள்ளிக்கிழமை RTO அலுவலகம், நகாடியா போலீஸ் அவுட்போஸ்ட்டை கடந்து சென்றுள்ளது.  ஆனால் அனைவரும் கடமை செய்யாமல் தூங்கி விட்டனர் போலும். இது தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என பதிவிட்டுள்ளார்.


பரேலியில் ஆட்டோவின் கூரை பகுதியில் மாணவர்கள் அமர்ந்து பயணிப்பதை கீழே காணலாம்:


 



 


இந்த வீடியோவை  கண்ட பரேலி போலீசார், தானாக முன்வந்து, பிரிவு 279 (அடிப்படையில் வாகனம் ஓட்டுதல்) கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அவர்கள் பதிவிட்ட ஒரு ட்வீட்டில் ஆட்டோரிக்ஷா ஓட்டுநருக்கு "அபராதம்" விதித்துள்ளதாகவும், "விதிகளின்படி சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டதாகவும்" தெரிவித்தனர். குழந்தைகளின் பெற்றோரை தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | 9 ஆண்டுகள் நீடித்த வழக்கு : நொய்டா இரட்டை கோபுர தகர்ப்பின் பின்னணி


கன்டோன்மென்ட் காவல் நிலைய எஸ்.எச்.ஓ., ராஜீவ் குமார் சிங் இது குறித்து கூறுகையில், மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக, 'அடையாளம் தெரியாத' ஓட்டுனர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளோம். ஆட்டோ கூரையில் அமர்ந்திருந்த அனைத்து குழந்தைகளும் பள்ளி சீருடையில் காணப்பட்டனர். மேலும், இது போன்ற ஓட்டுநர்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது என்பதை உறுதிசெய்ய பள்ளி நிர்வாகத்துடன் பேசுவோம். மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்படும்” என்றார்.


மேலும் படிக்க | சவப்பெட்டியுடன் சிரித்தபடி போட்டோ எடுத்த குடும்பம்: வைரல் போட்டோவால் பரபரப்பு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ