அசிங்கமான மஞ்சள் பற்கள் முத்து போல் ஜொலிக்கணுமா? இந்த மூலிகைகள் இருந்தால் போதும்

சிரிக்கும்போது பற்களின் மஞ்சள் நிறமானது உங்கள் நம்பிக்கையை குறைக்கலாம். இனி இதனால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை! அதனுடன் நீங்கள் பளபளப்பான பற்களைப் பெறுவதற்கு விலையுயர்ந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சமையலறையில் இருக்கும் சில மூலிகைகள் பயன்படித்தினால் போதும்.

சில இயற்கை பொருட்கள் பற்களை வெண்மையாக்க உதவும். எனவே முத்து போன்ற பளபளப்பான பற்களை நீங்கள் பெற வேண்டுமானால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை தினமும் பயன்படுத்தினால் போதும்.

1 /7

தயிரில் உள்ள புரதம், கால்சியம் மற்றும் புரோபயாடிகள் பற்களை வலிமையாக்கவும், வெண்மையாக்கவும் உதவும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்கி, வெண்மையாக்க உதவும்.

2 /7

வேம்பு மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது. பற்களை வலுப்படுத்துவது மற்றும் ஈறு பிரச்சனைகளை நீக்குவது மட்டுமின்றி, இயற்கையாகவே பற்களை வெண்மையாக்கவும் வேம்பு உதவுகிறது. வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவது பற்களில் படிந்திருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்வதோடு, பற்களின் நிறத்தையும் மேம்படுத்தும்.

3 /7

புதினா வாய் துர்நாற்றத்தை போக்க உதவும், அதனுடன் பற்களை வெண்மையாக்கவும் உதவுகிறது. புதினா இலைகளை அரைத்து அதில் சிறிது உப்பு கலந்து பிரஷ் செய்யவும். இவை பற்களில் தேங்கியுள்ள பாக்டீரியாக்களை நீக்கி, பற்களின் நிறத்தை போக்க உதவம்.

4 /7

ஸ்ட்ராபெர்ரியில் மாலிக் அமிலம் உள்ளதால், இவை பற்களின் கறைகளை நீக்க உதவுகிறது. இதற்கு ஸ்ட்ராபெர்ரிகளை மசித்து அதனுடன் பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் செய்து, இதை பிரஷில் துலக்கவும்.

5 /7

கிராம்பு பல் வலிக்கு நிவாரணம் தரும், அதனுடன் பற்களை வெண்மையாக்கவும் உதவுகிறது. இதற்கு கிராம்பை அரைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பற்களில் தடவி சிறிது நேரம் கழித்து பற்களை துலக்கவும். கிராம்புகளில் உள்ள கிருமி நாசினிகள் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்து, பற்களை வெண்மையாக்கும்.

6 /7

துளசியில் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. துளசி இலைகளை மென்று சாப்பிடுவது பற்களை சுத்தம் செய்யவும், ஈறுகளை வலுப்படுத்தவும் உதவும். துளசியில் உள்ள கிருமி நாசினிகள் வாயில் பாக்டீரியாக்கள் வளராமல் தடுக்கலாம், மேலும் பற்களை பளபளப்பாகலாம்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.