பழங்களை கொத்தாக தூக்கிச் செல்லும் கரடியின் வைரல் வீடியோ
சாப்பிடுவதற்கு பழங்களை கொத்தாக கரடி ஒன்று தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பசி எடுத்துவிட்டால் போதும் என்ன கிடைத்தாலும் பசி அடங்கும் வரை சாப்பிட்டுவிடுவோம். அதேநேரத்தில் ருசிக்காக சாப்பிட்டோம் என்றால், அதன் மீதான ஆசை தீரும் வரை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுவோம். வீட்டுக்கும்கூட பார்சல் செய்ய தயாராகிவிடுவோம். அது என்ன பொருளாக இருந்தாலும் சரி, எப்படியாவது எடுத்து வந்துவிடுவோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளின் மீது அப்படியான ஆசை இருக்கும். ஒருவருக்கு திருப்பதி லட்டு மீது அலாதி பிரியம் இருக்கும்.
மேலும் படிக்க | டெலிவரி பாயை வலை வீசி தேடும் ‘ஸ்விக்கி’ : தகவல் கொடுத்தால் ரூ. 5,000 பரிசு!
ஒருவருக்கு பழனி பஞ்சாமிர்தம் என்றால் பாட்டிலோடு சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார். அசைவம் முதல் சைவம் வரை என ஏதாவது ஒரு திண் பண்டத்தின் மீதான மோகம் கொண்டிருப்போம். இது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய விநோத பழக்கம் என எண்ணிவிடாதீர்கள். விலங்குகளுக்கும் இப்படியான மோகம் இருக்கிறது. தங்களுக்கு பிடித்த உணவை கொத்தாக தூக்குவது விலங்குகளிடத்திலும் நீங்கள் பார்க்க முடியும். டிவிட்டரில் வைரலாகியிருக்கும் வீடியோ ஒன்றில் கரடி ஒன்று, தனக்கு பிடித்த பழத்தை கொத்தாக தூக்கிச் செல்கிறது.அது எப்படி தூக்கிச் செல்கிறது என்பது தான் இங்கு ஹைலைட்.
கைகளில் நிரம்ப பழத்தை தூக்கியிருக்கும் கரடி, கால்கள் இரண்டிலும் இரு பழங்களை இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறது. இந்தக் காட்சியை யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்திலும் பகிர்ந்துள்ளனர். மனிதர்களை விஞ்சும் அளவுக்கு கரடிக்கு அந்த பழத்தின் மீதான ஆசை இருந்திருக்கிறது. கிட்டதட்ட 20 பழங்களை அசால்டாக எடுத்துக் கொண்டு நடந்து செல்கிறது. வீடியோவைப் பார்த்த பலரும் கரடியை பார்த்து வயிறு குலுங்கச் சிரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | நிம்மதியா தூங்க விட்றானா பாரு...நாயிடம் உரண்டை இழுக்கும் பூனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR