இணையத்தில் வைரலாகும் “அதர்வா”வின் பிட்னெஸ் போட்டோ

தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் மகன் அதர்வா முரளியின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் மகன் அதர்வா, தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இயக்குனர் பாலாவின் படமான பரதேசி திரைப்படத்தில் அதர்வாவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
அதர்வா நடிப்பில் தற்போது ‘செம போத ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. ஒவ்வொரு படத்துக்கும் எந்த விதமான கேரக்டர் தேவையோ, அதற்காக தன்னை தயார் படுத்திகொள்வதில் அதர்வா மிகவும் கவனமாக இருப்பவர்.
அந்த வகையில், உடல் பிட்னெஸ் மற்றும் 6 பேக் கொண்ட நடிகர்களான சீயான் விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், பரத் வரிசையில் அதர்வாவும் இணைந்துள்ளார்.
இவர் ஜிம்மில் உடல்பயிற்ச்சியின் போது எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.