கொரோனா முன்னெச்சரிக்கை முகமூடி பற்றாக்குறையை சமாளிக்க வீட்டில் இருந்தப்படி முகமூடிகளை எவ்வாறு தயாரிப்பது என நடிகர் இந்திரன்ஸ் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநில திரைப்பட விருது பெற்ற நடிகர் இந்திரன்ஸ் திரைப்படத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு தையல் நிபுணர் என்பது உங்களுக்குத் தெரியுமா? திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகியும், நடிகரின் தையல் திறன்கள் இன்றும் துருப்பிடிக்கவில்லை என்பதை கேரள சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோவில் நாம் காணலாம். இந்த வீடியோவில் நடிகர் இந்திரன்ஸ், முகமூடி பற்றாக்குறையை சமாளிக்க வீட்டில் முகமூடிகளை எவ்வாறு தைப்பது என்பதை நமக்கு கற்று தருகிறார்.


சுமார் 4.36 நிமிடம் உள்ள இந்த வீடியோவில், திருவனந்தபுரத்தின் பூஜாப்புராவில் உள்ள மத்திய சிறை தையல் பிரிவில் இந்திரன்ஸ் காணப்படுகிறார்.



“மாநிலத்தில் முகமூடிகளுக்கு பெரும் பற்றாக்குறை உள்ளது. சிறைகளில் நிறைய முகமூடிகள் தயாரிக்கப்படுகின்றன. கைதிகளால் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முகமூடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முகமூடி பற்றாகுறை தீரவில்லை. இந்த முகமூடிகளை குறைந்தபட்ச பொருட்கள் கொண்ட வீடுகளில் செய்யலாம். அடிப்படை தையல் திறன் கொண்ட எவரும் அதை வீட்டிலேயே செய்யலாம். அதை எப்படி செய்வது என்று நான் உங்களுக்குக் காண்பிப்பேன்,” என்று வீடியோவில் நடிகர் கூறுகிறார்.


பின்னர் தேவையான பொருளை உள்ளடக்கிய செயல்முறையை விளக்கி செல்கிறார் இந்திரன்.


கேரள அரசின் பிரேக் தி செயின் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த வீடியோவை சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா மற்றும் நடிகரும் பகிர்ந்துள்ளனர். எழுதும் நேரத்தில், இது 24 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டிருந்தது. அவர் திரையுலகில் ஒரு உண்மையான உத்வேகம் என்று பல ரசிகர்கள் கூறி, பாராட்டுச் செய்திகள் பகிர தொடங்கியுள்ளனர்.