நடிகர் ரஜினியை தொடர்ந்து அரசியல் களத்தில் இறங்கும் நடிகர் கமல் வரும் 21-ஆம் தேதி புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளர். இதை தொடர்ந்து நாளை நமதே என்ற புதிய இணையதளத்தை தொடங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அவருக்கு உரிய பதிலளிக்காமல் அமைச்சர்களோ கமல் அரசியலுக்கு வரட்டும், அப்போதுதான் அது எத்தகைய முள்படுக்கை என்பதை அவர் புரிந்து கொள்வார் என்று விமர்சனம் செய்தனர்.


இதையடுத்து, கமல் ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி அளித்த போது அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அதற்கான பணிகளில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


மேலும் ரஜினியின் ஏற்கெனவே அரசியலுக்கு வருவது போல் ரசிகர்கள் மத்தியில் பேசியதால் இன்னும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ரஜினி விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அனைத்தும் ரெடியாக உள்ளது, இனி அம்பு விடுவதுதான் பாக்கி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


இதைத் தொடர்ந்து கமல் வரும் 21-ஆம் தேதி அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டிலிருந்து தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். படப்பிடிப்பு காரணங்களுக்காக கமல் அமெரிக்கா சென்றுள்ளார்.


அவரது மன்ற நிர்வாகிகள் நாளை தேர்தல் ஆணையத்தில் கட்சி தொடங்குவதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனர். இந்நிலையில் http://naalainamadhe.maiam.com என்ற இணையதளத்தை கமல் தொடங்கினார்.


தன்னார்வலர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இதில் இணையலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். தன்னார்வலர்கள், சிஎஸ்ஈஆர், என்ஜிஓ, அடுக்குமாடி குடியிருப்பு என 4 பிரிவுகளில் பதிவு செய்யலாம். கல்வி, கொழில் சுற்றுச்சூழல்,வேளாண் துறை, நீர் மேலாண்மை, உள்ளிட்ட துறைகளில் பதிவு செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.