சுந்தர பாண்டியன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் சௌந்தரராஜா. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தர்மதுரை, திருட்டு பயலே-2 உள்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதை தவிர தற்போது இவர் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் மற்றும் சிலுக்குவார் பட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் இவருக்கும் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கும் தமன்னாவுக்கும் நேற்று காலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள K.S.மஹாலில் திருமணம் நடைபெற்றது. இதில் உறவினர்களும் திரையுலகினரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.