அண்மையில் தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார் நடிகர் சூர்யா சிவக்குமார். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும், திரையுலகத்தினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழ்த்துக்களின் வார்த்தையும் மொழியும் மாறினாலும் வாழ்த்து என்பது சொல்பவருக்கும், பெறுபவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. ஆனால், சொல்லும் வாழ்த்தை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பும் திறமை சிலருக்கு தான் இருக்கும்.


நடிகர் சூர்யாவின் ரசிகர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்த இந்திரஜித் ஜாவ். கலைஞரான அவர் சூர்யாவின் உருவத்தைத் தனது மூக்கைக் கொண்டு சுவரில் வரைந்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். உருவப்படத்தை எப்படி வரைந்தார் என்பதை காட்டும் வீடியோவையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.



இந்த வீடியோவை இயக்குநர் ராஜசேகர் பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யா, தனது புகைப்படத்தைத் தத்ரூபமாக வரைந்த தனது ரசிகரின் அந்த வீடியோவை ரீட்வீட் செய்து நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார்.



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக அமேசான் பிரைமில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, ‘வாடிவாசல்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ’ஜெய்பீம்’ ஆகிய திரைப்படங்களில் சூர்யா நடித்து வருகிறார்.  


ALSO READ | வெற்றிமாறன்-சூர்யா கூட்டணி "வாடிவாசல்" திரைப்படத்தின் டைடில் லுக் வெளியானது!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR