இணையத்தில் சாதாரண நபர்களின் சில செயல்கள் எப்படி பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகிறதோ, அதேபோல பிரபலங்களின் செயல்கள் விரைவில் மக்களின் கவனத்தை ஈர்த்துவிடும்.  இதுபோன்று பிரபல சீரியல் நடிகையாக விளங்கும் தீபிகா சிங்கின் வீடியோ ஒன்று தான் தற்போது வைரலாகி வருகிறது.  விஜய் தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பான 'என் கணவன் என் தோழன்' சீரியலில் 'சந்தியா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!


இதில் பல போராட்டங்களை மீறி தன் கணவன் உதவியுடன் எப்படி போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பது தான் கதை.  இந்த தொடர் அதிக மக்களால் விரும்பி பார்க்கப்பட்டது.  தீபிகா சிங் அவர் நடித்த தொடரின் இயக்குனர் ரோஹித் ராஜ் கோயலையே திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ஸோஹம் என்கிற ஒரு ஆண் குழந்தை உள்ளது. 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திலுள்ள 'பான் கே டிட்லி தில் உடா' என்ற பாடலுக்கு தீபிகா சிங் ரீலிஸ் செய்தபோது எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு நிகழ்வு தான் தற்போது இணையத்தில் உலா வருகிறது.


 



அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவில், தீபிகா சிங் மஞ்சள் நிறத்தில் ஷார்ட் பிராக் மற்றும் வெள்ளை நிற ஷூ அணிந்துகொண்டு 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திலுள்ள 'பான் கே டிட்லி தில் உடா' என்ற பாடலுக்கு உற்சாகமாக வெட்டவெளியில் நடனமாடுகிறார்.  அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீச அவரது ஆடை காற்றில் பறந்துவிடுகிறது.  ஆனால் அவர் அதை சாதூர்யமாக சரிசெய்துவிட்டு எவ்வித பதற்றமும் இல்லாமல், தனது நடனத்தை அதே உற்சாகத்தோடு தொடர்கிறார்.


பாடல் வரிகளை இந்த வீடியோவிற்கு கேப்ஷனாக சேர்த்து தீபிகா சிங்க் பதிவிட்டுள்ளார்.  இந்த காட்சி சிலரை முகம் சுளிக்க செய்தாலும், சிலரை ரசிக்க செய்து இருக்கிறது.  இந்த வீடியோவை பார்த்த சிலர் வசைபாடினாலும், பல ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு இதயம் மற்றும் நெருப்பு எமோஜிகளை கமெண்ட் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | குறி வைத்த சிங்கம், தப்பித்ததா காளை? நெஞ்சை பதபதைக்கும் வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR