‘அதே கண்கள்’ தொலைக்காட்சி தொடரின் கவர்ச்சி வில்லி மோகனாவின் நடன விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் போஜ்புரி சிஸ்லர் மோனாலிசா. தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது வீடியோ மூலம் காட்சி தருபவர், அந்த வகையில் தற்போது அவர் புதிய வீடியோ மூலம் ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். மேற்கத்திய நாடுகளில் வேடிக்கையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று ஹாலோவின். இந்த ஹாலோவின் இந்தியாவின் பல நகரங்களிலும் கொண்டாடப்படுகிறது.


இந்நிலையில் ஹாலோவின் கொண்டாட்டத்தின் போது மக்கள் அகோர வேடமிட்டு வேடிக்கை காட்டுவது வழக்கம். இதே வழக்கத்தினை தானும் பின்பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மோகனா.



போஜ்புரி துறையில் சேர்ந்த நடிகையாக வலம் வருபவர் மோனாலிசா, இப்போது அவர் தொழில்துறையில் தேடப்படும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவர் கிட்டத்தட்ட அனைத்து உயர்மட்ட போஜ்புரி நடிகருடனும் பணியாற்றியுள்ளார் மற்றும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.


மேலும் அவர் தற்போது பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'அதே கண்கள்(Nazar)'-ல் காணப்படுகிறார், மேலும் மோகனா என்ற தீய சக்தியின் பாத்திரத்தை வாழ்ந்து காட்டி வருகின்றார். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமான ஓட்டத்தையும் அனுபவித்து வருகிறது, குறிப்பாக மோகனாவின் பாத்திரம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.


மோனலிசா எனப்படும் மோகனாவின் பாத்திரம் பிரபலமானதற்கு காரணம் அவரது அதே கண்கள் தொடர் மட்டும் அல்ல, பாலிவுட் பிரபலங்களை கொண்டு நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசனில் அவர் பங்கேற்றதும் தான். சீசன் 10-ல் பங்கேற்ற மோனாலிசா மிகவும் பேசப்பட்ட போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.