டெக்னாலஜி வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் பறவைகளும், விலங்குகளும் கூட தங்களை அப்டேட் செய்து கொண்டிருக்கின்றன. அண்மையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குரங்கின் வீடியோ வைரலான நிலையில், இப்போது பென்குயின் ஒன்று செல்பி எடுக்கும் வீடியோ முகநூலில் வைரலாகியிருக்கிறது. செல்பி எடுப்பது இப்போது ஒரு மோகமாக மாறிவிட்ட நிலையில், அது உலகின் துருவப் பகுதியில் அமைந்திருக்கும் அண்டார்டிகா வரை பரவிவிட்டது என்பது தான் வேடிக்கை. அதுவும் அங்கிருக்கும் பென் குயின் செல்பி எடுத்திருக்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குட்டி நாய்க்கும் குரங்குக்கும் செம சண்டை: ஜெயிச்சது யார்? வைரல் வீடியோ


antarctica.gov.au என்ற முகநூல் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருகிகறது. அதில் பென் குயின்கள் கூட்டமாக வந்து கேமரா முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றன. இந்த விநோதமான மற்றும் வியப்பான காட்சியை அந்த பக்கத்தில் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளனர். 38 விநாடிகள் மட்டுமே அந்த வீடியோ இருந்தாலும், காண்போரை வெகுவாக ரசிக்க வைக்கிறது. அண்டார்டிகா என்றாலே துருவப் பகுதி. அங்கு முழுக்க முழுக்க பனிப் பிரதேசம் நிறைந்த நில அமைப்புகள் தான். பனி மலைகள், முகடுகளாக இருக்கும். மனிதர்கள் வாழ தகுதியற்ற இடம் என்று அறிவியலாளர்களால் கூறப்பட்டிருக்கும் பகுதி.