பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இன் தயாரிப்பாளர்கள் எப்போதும் இரவு எபிசோடில் இருந்து வெவ்வேறு நேரத்தில் குறுகிய வெவ்வேறு விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் பார்வையாளர்களை கிண்டல் செய்வதை ஒரு புள்ளியாக மாற்றியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக் பாஸ் தமிழ் 4 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி கடந்த 46 நாட்களாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை 45வது நாள் என்பதால் 45 மணி நேர டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கும் அறிவிக்கபட்டு இருந்தது. 



 


ALSO READ | பாலாஜியின் திருட்டை கண்டுபிடித்த பிக் பாக் 4 ஹவுஸ்மேட்ஸ்!!


சனம், அனிதா, நிஷா ஒரு அணியாகவும், ஆரி, ரியோ, கேப்ரியலா ஒரு அணியாகவும் சுச்சி, பாலா, ரம்யா பாண்டியன் ஒரு அணியாகவும், அர்ச்சனா, சோம், சம்யுக்தா ஒரு அணியாகவும் ஜித்தன் ரமேஷ், ஷிவானி, ஆஜீத் ஆகியோர் ஒரு அணியாகவும் பிரிந்து மணிக்கூண்டு டாஸ்க்கை விளையாடி வருகின்றனர். 


3 மணி நேரத்தை யார் சரியாக கணக்கிடுகிறார்கள் என்பது தான் இந்த டாஸ்க்கின் அடிப்படையாக உள்ளது. முதல் நாளில் ரியோ அணியினர் 3 மணி நேரம் 1 நிமிடத்தில் இதை செய்திருந்தனர். நேற்று 3 மணி நேரம் 32 நிமிடத்தில் இதை முடித்தனர். 



அர்ச்சனா, சோம், சம்யுக்தா அணியினர் 3 மணி நேரம் 8 நிமிடம் மற்றும் 3 மணி நேரம் 4 நிமிடங்களில் இந்த டாஸ்க்கை முடித்துள்ளனர். 


இதற்கிடையில் இன்று முதலாவது புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில்., பிக் பாஸ் பணியின் வெற்றியாளர்களை அறிவிப்பதைக் கேட்கலாம், மேலும் 6 போட்டியாளர்கள் அடுத்த வார கேப்டன் பதவியில் நுழைவதற்கு தகுதி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது அந்த வீடியோவில். 


 


ALSO READ | சிக்கலில் மாட்டிக்கொண்ட இந்த பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்கள்.....இன்றைய புரோமோ


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR