த்ரில்லர் படத்தில ஹீரோவும் ஹீரோயினும் ஆடையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ளார்... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரானோ ஊரடங்கால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். இருந்தாலும், இயக்குனர் ராம்கோபால் வர்மா இணையதளங்களில் படங்களை வெளியிடுவதில் மும்முரமாய் இருக்கிறார். அது, சாதாரணப் படங்கள் அல்ல ஆபாசப்படங்கள். 


இப்படியும் கூட ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் நினைத்தால் பணம் சம்பாதிக்க முடியும் என 'கிளைமாக்ஸ், நேக்டு நங்கா நக்னம்' (CLIMAX and NAKED) என இரண்டு படங்களை வெளியிட்டார். அடுத்து 'த்ரில்லர்' என்ற ஆபாசப்படத்தை ராம்கோபால் வர்மா ஆரம்பித்துள்ளதாகவும், அந்த படத்தின் நடைக்கையை சில நாட்களுக்கு முன் அவர் அறிமுகம் செய்திருந்தார். 


இந்நிலையில், இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தனது படைப்புகளான க்ளைமேக்ஸ், நேக்டு படத்தின் ஃபாலோ அப் என்றும்  ராம்கோபால் வர்மா கூறியிருந்தார். இதனால் இந்தப் படத்திலும் பலான காட்சிகள் பல இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனது படத்தின் ஹீரோவை அறிமுகம் செய்தார் ராம் கோபால் வர்மா. ஒடிசாவை சேர்ந்த ராக் என்ற பெயர் கொண்ட அந்த இளைஞர் ராம் கோபால் வர்மாவின் த்ரில்லர் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.



ALSO READ | கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தில் வைரலான அமலா பாலின் போட்டோஸ்


மேலும், அப்சரா ராணியும் ராக்கும் இணைந்து இருக்கும் சில போட்டோக்களையும் ராம் கோபால் வர்மா ஷேர் செய்துள்ளார். அதில் இருவரும் ஆடையில்லாமல் இருப்பதாக தெரிகிறது. இருவரும் ஆடையில்லாமல் ஒருவர் மீது ஒருவர் படுத்தப்படியும் கட்டியணைத்தப்படியும் உள்ளனர். இது த்ரில்லர் படத்தின் காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.