#வரிகட்டுங்க_விஜய்: நடிகர் விஜய்யை வரி கட்ட சொல்லி ட்விட்டரில் ட்ரெண்டிங்
நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது மெட்ராஸ் நீதிமன்றம், ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது என நீதிபதி காட்டம்
சென்னை: கோடிக்கணக்கில் செலவழிச்சு கார் வாங்க முடியும் அதே நேரத்தில், வரி கட்டாமல் தப்பிக்க நினைப்பது ஏன் என கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
நடிகர் விஜய், இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். அதற்கு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அந்த தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவும் அறிவுறுத்தியது. இதை அடுத்து #வரிகட்டுங்க_விஜய் என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
தல அஜித், கமலஹாசன் போன்றோர் ஒழுங்காக வரி கட்டுகிறார், அதே போல் நீங்களும், ஒழுங்காக வரி கட்டுமாறு அறிவுறுத்தினர். பல சுவாரஸ்மான மீம்ஸ்கள் ட்விட்டரை ஆக்கிரமித்துள்ளன. உங்களுக்கான சில சுவாரஸ்யமான ட்வீட்கள்.
நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சமூக நீதிக்கு பாடுபடுவதாக திரையில் பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கண்டித்தார்.
Also Read | விஜய் படத்தை காட்டி சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை; வைரல் போஸ்ட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR