விஜய் படத்தை காட்டி சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை; வைரல் போஸ்ட்

நடிகர் விஜயின் பிகில் படத்தை போட்டுக்காட்டி சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 8, 2021, 11:53 AM IST
விஜய் படத்தை காட்டி சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை; வைரல் போஸ்ட் title=

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிறுவன் தனது மாமா உடன் பைக்கில் சென்றபோது கீழே விழுந்துள்ளான். அப்போது அந்த சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சிறுவனுக்கு உடனடியாக அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அந்த சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், தையல் போட்டு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதனால், சிறுவனுக்கு முதலில் ஊசி போடுவதற்காக டாக்டர்கள் (Doctors) முயன்றனர். ஆனால் சிறுவன் பயத்தில், தனக்கு ஊசி வேண்டாம் என்று அடம்பிடித்தான், இதனால் அந்த சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால், டாக்டர்கள் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தனர். 

ALSO READ | விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்

அப்போது அங்கு இரவு பணியில் இருந்த ஜின்னா என்பவர், சிறுவனிடம் பேச்சு கொடுத்து உனக்கு என்ன பிடிக்கும் என கேட்டுள்ளார். அதற்கு சிறுவன், தனக்கு நடிகர் விஜய்யை (Actor Vijay) மிகவும் பிடிக்கும் என்று வலியில் அழுது கொண்டே கூறியுள்ளான். தொடர்ந்து நடிகர் விஜய்யை பற்றி சலிக்காமல் பதில் அளித்து கொண்டே இருந்தான். அப்போது பேசிக்கொண்டே ஜின்னா என்பவரின் செல்போனில் வைத்திருந்த விஜய்யின் ‘பிகில்’ (Bigil) படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்துள்ளார். அதை சிறுவன் வாங்கிக்கொண்டு படத்தை மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். அந்த சமயத்தில், டாக்டர்கள், சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க ஊசி மூலம் மருந்து செலுத்தி், தையல் போட்டு சிகிச்சை அளித்தனர்.

விபத்தில் காயம் அடைந்த சிறுவனுக்கு, விஜய்யின் பிகில் படத்தை போட்டு காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஹிட் திரைப்படம் பிகில். த்திரைப்படமானது விளையாட்டினை அடிப்படையாகக் கொண்டும் எடுக்கப்பட்டுள்ளது. இதனை அட்லீ இயக்கியுள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம் மற்றும் ஏ. ஜி. எஸ். நிறுவனம் தயாரித்து உள்ளார். இதில் விஜய் (இரட்டை வேடம்) நயன்தாரா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | #VaathiComing பாடல் யூடியூபில் 210 மில்லியன் பேர் பார்த்து புதிய சாதனை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News