ஆர்.கே.நகர் தேர்தலை அடுத்து ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்!!
ஆர்.கே.நகர் தேர்தலை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தலை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
இந்த மாதம் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு சென்னையில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த சந்திப்பு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் எனவும். தினமும் கிட்டத்தட்ட 1,000 ரசிகர்களை சந்திக்க உள்ளார் எனவும் அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மாற்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடந்த ரசிகர்கள் சந்திப்பில், "ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்". "நான் பச்சைத் தமிழன். தமிழகத்தில் அரசியல் நிலவரம் கெட்டுப் போய் இருக்கிறது. ஜனநாயகம் சீர்கெட்டுள்ளது. மாற்றம் தேவை. சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் என்ற பெயரில் சிலர் வேண்டாத கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இந்த அளவுக்கு தமிழர்கள் கீழ்த்தரமாக சென்றுவிட்டது வருத்தமளிக்கிறது. போர் வரும்போது அதை எதிர்கொள்வோம்" என பேசியிருந்தார்.
தற்போது மீண்டும் ராசிகளை சந்திக்க உள்ளதால், அரசியல் குறித்து முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.