ஒன்று பிடித்த வேலை செய்யவேண்டும், இல்லையென்றால் கிடைத்த வேலை செய்யவேண்டும் என்பார்கள். காரணம் இரண்டும் ஒருசேர அமைவது என்பது கடினமான ஒன்று.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் கனடா நாட்டை சேர்ந்த Jahmaul Allen, இந்த இரண்டினையும் ஒன்றாய் பார்த்து வருகின்றார்.


ஆம்... Jahmaul Allen, கனடா நாட்டின் டொரென்டோ சர்வதேச விமான நிலையத்தில் தளப் பணியாளராக பணியாற்றி வருகின்றார். ஆனால் இவருக்கு ஒரு நடன கலைஞர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. இவரால் தொழில்முறை நடன கலைஞராக பணியாற்ற முடியவில்லை என்ற போதிலும், தான் புரியும் தள நிர்வாகி பணியின் போது நடனமாடி, நிலையத்திற்கு வரும் பயணிகளை மகிழ்வித்து வருகின்றார்.


சமீபத்தில் Jahmaul Allen, விமான நிலையத்தில் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவினை அவருக்கு எதிரில் வந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ மூலம் தற்போது Jahmaul Allen உலக அளவில் பேமஸ் ஆகியுள்ளார்.



இதுகுறித்த Jahmaul Allen-னிடம் கேட்ட போது, எனது உடல் அசைவுகளால் மக்களை ஈர்க்க நினைத்தேன், தற்போது அதையே தான் செய்து வருகின்றேன். ஆசையினையும் தொழியிலையும் நான் பர்த்ததில்லை. மக்களின் கவனத்தை ஈர்த்ததில் பெரும் மகிழ்ச்சி என தன்னடக்கமாக கூறி சென்றுவிட்டார்.