தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை TRAI-ன் பயனர் குறிப்பிட்ட கட்டண திட்டத்தை வெளியிடுவதை எதிர்த்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று நிறுவனங்களும் தங்கள் இணையதளத்தில் அதிகாரத்தின் பயனர் குறிப்பிட்ட கட்டணத் திட்டத்தைக் காட்ட விரும்பவில்லை. இந்த நடைமுறையானது தங்களது பயனர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், பயனர்கள் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அதிகாரத்துடன் புகார் அளிப்பார்கள் என்றும் நிறுவனங்கள் கூறுகின்றன. 


ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஏற்கனவே பயனர்களுக்கு பல பயனர் குறிப்பிட்ட சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ மிகக் குறைந்த பயனர் குறிப்பிட்ட திட்டங்களையே அறிமுகப்படுத்தியுள்ளது. அதேவேளையில் பயனர் சார்ந்த திட்டங்களுக்கு பதிலாக ஜியோ தனது பயனர்களுக்கான விளம்பர சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த ​​மூன்று தொலைத் தொடர்பு நிறுவனங்களும் TRAI-ன் இந்தக் கொள்கையை எதிர்த்து நின்றுள்ளன.


TRAI தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் கட்டணத் திட்டங்கள் குறித்து வெளிப்படைத்தன்மையை வைத்திருக்க அறிவுறுத்துகிறது. தொலைதொடர்பு நிறுவனங்களின் அனைத்து திட்டங்களையும் இணையதளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டது. 


இதனிடையே இந்த திட்டங்கள் விளம்பர அல்லது எந்தவொரு பயனர் குறிப்பிட்டவையா என்றும், இந்த வழியில், இணையதளத்தில் பயனர் குறிப்பிட்ட சலுகையை வெளியிடுவது பயனர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ரிலையன்ஸ் ஜியோ TRAI-க்கு ஒரு கடிதம் எழுதியது. இதன் காரணமாக தொலைத் தொடர்பு நிறுவனம் மீதான புகார்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டது. மேலும் பயனர்கள் தங்களுக்கு கிடைக்காத திட்டங்களை விரும்பலாம், அதன் காரணமாக அவர்கள் TRAI வசம் புகார் செய்யலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது.


அதேப்போல், பயனர் சார்ந்த திட்டத்தை வெளியிட கூறிய TRAI-ஐ பாரதி ஏர்டெல் எதிர்த்துள்ளது. இதே வழயில் வோடபோன்-ஐடியா நிறுவனமும் இணைந்துள்ளது. காலாவதியான சலுகைகள் காரணமாக, பயனர்களிடையே அதிருப்தி ஏற்படக்கூடும் என்று இந்நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்த விஷயத்தில் TRAI என்ன சொல்கிறது என்ற தகவல்கள் வெளியாகவில்லை. வரும் சில வாரங்களில் அதைப் பற்றி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.