ரெடியாகும் தல ரசிகர்கள்!! அஜித்தின் `நேர்கொண்ட பார்வை` டிரைலைர் வெளியீடு
அஜித் நடித்து வரும் `நேர்கொண்ட பார்வை` படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: அஜித் நடித்து வரும் "நேர்கொண்ட பார்வை" படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
"விஸ்வாசம்" படத்தை தொடர்ந்து தல அஜித் நடித்து வரும் 59_வது படமான "நேர்கொண்ட பார்வை" எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் தான் இந்தப் படம். இந்தப் படத்துக்கான இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக வித்யா பாலன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கோகுல் சந்திரன் படத்தொகுப்பையும், திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளையும், கே.கதிர் கலை பணிகளையும், பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பையும் கவனிக்கிறார்கள்.
இந்த நிலையில், அஜித் நடித்து வரும் "நேர்கொண்ட பார்வை" படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் அஜித் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றையும் படக் குழுவினர் வெளி்யிட்டுள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது