என்னது விஸ்வாசம் தீம் மியூஸிக் விஜய் படத்தின் காப்பியா?...
விஸ்வாசம் படத்தின் தீம் மியூஸிக், விஜய் நடித்த வில்லு படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சி என இணையத்தில் சர்ச்சையை கிளம்பியுள்ளது..
விஸ்வாசம் படத்தின் தீம் மியூஸிக், விஜய் நடித்த வில்லு படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சி என இணையத்தில் சர்ச்சையை கிளம்பியுள்ளது..
சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடிக்க, டி இமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'விஸ்வாசம்' இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘அட்ச்சி தூக்கு’ கடந்த 10 ஆம் தேதி வெளியானது. இமான் பாடிய இப்பாடல் 9 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இப்பாடலை தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் டிராக்காக ‘வேட்டிக் கட்டு’ எனும் பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டனர்.
‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசை டி.இமான். விஸ்வாசம் படத்தின் பாடல்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. தற்போது இதன் தீம் மியூஸிக் மீது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது விஸ்வாசம் படத்தின் தீம் மியூஸிக், விஜய் நடித்த வில்லு படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சியில் இடம் பெறும் இசையை ஸ்பீடாக்கி, காப்பி அடிக்கப்பட்டிருப்பதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.
தவிர, அஜித்தின் இந்த தீம் மியூஸிக் அர்ஜூன் நடித்த 'மருதமலை' படத்தின் சண்டைக்காட்சி தீமோடு ஒன்றிப் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பதிவு ajith ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.