இந்த வாரம் இணையத்தில் பட்டையைக் கிளப்பிய வைரல் வீடியோக்கள்!!
அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் சோகத்தின் ஒரு வடிகாலாக, வருத்தத்தில் வெளிச்சம் காட்டும் ஒரு கலங்கரை விளக்கமாக சமூக ஊடகமும், அதில் வரும் வினோத செய்திகளும் அமைகின்றன.
மனித மனம் வினோதமானது. ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் மனம், அடுத்த கணமே சோகத்தில் மூழ்கிப்போகிறது. இந்த சோகத்தின் ஒரு வடிகாலாக, வருத்தத்தில் வெளிச்சம் காட்டும் ஒரு கலங்கரை விளக்கமாக சமூக ஊடகமும், அதில் வரும் வினோத செய்திகளும் நமக்கு உதவுகின்றன. சில கணங்களுக்கு நம் கவலைகளை தள்ளி வைக்க இவை நமக்கு துணையாக இருக்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இணையத்தில் நாம் காணும் வீடியோக்கள் நம்மை வெவ்வேறு உணர்ச்சிகளில் மூழ்கடிக்கச் செய்கின்றன. சிரிப்பு, சந்தோஷம், கோபம், கொந்தளிப்பு, ஆச்சரியம், அதிர்ச்சி, சோகம், கண்ணீர் என நாமே மறந்துவிட்ட பல வித உணர்ச்சிகளை இவை நம் உள் மனதிலிருந்து வெளிக்கொண்டு வருகின்றன.
அவ்வகையில், கடந்த வாரம் இணைய வாசிகளின் உள்ளம் கவர்ந்த சில வைரல் வீடியோக்களின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.
நட்புக்காக திரைப்படக் காட்சியை நினைவூட்டும் உண்மைச் சம்பவம்
கார் வாங்குவதற்காக கார் ஷோரூமுக்கு வந்த நபர்களை திட்டிய பணியாளர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த இளைஞரின் செய்தி வைரலாகிறது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் இராமன பாள்யா பகுதியில் வசிக்கும் கெம்பேகவுடா என்ற இளைஞன் கார் வாங்க திட்டமிட்டார். அதற்காக, தும்கூரில் உள்ள மஹிந்திரா கார் ஷோரூமுக்கு சென்று கார்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் அணிந்திருந்த ஆடைகளைப் பார்த்த பணியாளர்கள் அவரை அவமதித்துள்ளனர். '10 ரூபாய் பெறாத ஆடை அணிந்துள நீ கார் வாங்கப் போறியா' என்று கேட்டு, கெம்பேகவுடாவை அவமானப்படுத்தினார்கள்.
இதனால், கோபமும், ஆத்திரமும் அடைந்த அந்த இளைஞன், '1 மணி நேரத்தில் 10 லட்சம் ரூபாயைக் கொண்டுவருகிறேன், உடனடியாக காரை டெலிவரி கொடுப்பீர்களா?' என கேட்டு சவால் விட்டார்.
அதேபோல ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் ரூபாய் பணத்தையும் கொண்டுவந்து கொடுத்த கெம்பேகவுடா, காரை உடனே டெலிவரி செய்ய வேண்டும் என அடம்பிடித்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
சிக்சரில் கோலிக்கு டஃப் கொடுக்கும் தாத்தா..
கிரிக்கெட் என்றாலே இந்தியாவில் கெத்தான விஷயம்!! இண்டர்நேஷனல் கிரிக்கெட்டை பார்க்கும்போது கிடைக்கும் அதே ஃபீலிங்கை, உள்ளூர் கிரிக்கெட்டிலும் வெளிப்படுத்துவது தான் ரசிகர்களின் ஸ்டைல். சர்வதேச கிரிக்கெட்டில் வீரர்களுக்கு இருக்கும் ரூல்ஸ் மற்றும் வயது வரம்பு எல்லாம் உள்ளூர் கிரிக்கெட்டில் கிடையாது. போட்டி நடக்கும் இடத்தில் வைப்பது தான் சட்டம், ரூல்ஸ் எல்லாமே.
ஊர் மக்கள் புடைசூழ, அப்படிப்பட்ட ஒரு மேட்சை பார்த்தீர்கள் என்றால் செம ஜாலியாக இருக்கும். இப்போது இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் வீடியோவும், இந்த ரகமே. ஊர் இளைஞர்கள் புடை சூழ்ந்திருக்கும் இடத்தில் தாத்தா செம எனர்ஜியுடன் விளையாடுகிறார்.
பந்தை தூக்கியடிக்கும் அவர், சிக்சர் அடித்ததுபோல் துள்ளிக் குதிக்கிறார். அவர் பந்தை அசால்டாக அடிப்பது, சுற்றியிருக்கும் இளைஞர்களுக்கும் குஷியை ஏற்படுத்திருகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன், விராட் கோலி மற்றும் பிசிசிஐ-ஐ டேக் செய்து இந்திய அணிக்கான அடுத்த கேப்டன் கிடைத்துவிட்டார் என நக்கலாக எழுதியுள்ளார்.
கடும் குளிரில் நாய் குட்டிகள் குளிர் காய ‘தீ’ மூட்டிய கருணை மனம்!
இந்த வாரம் வைரலான வீடியோவில், சில நாய் குட்டிகள் குளிரால் நடுங்குவதையும், குளிரில் இருந்து தன்னை காத்துக் கொள்ள நெருப்புக்கு அருகில் அமர்ந்திருப்பதையும் பார்க்க முடிகின்றது. வட இந்தியா முழுவதும் கடுமையான குளிர் நிலவுகிறது. இதைத் தவிர்க்க மனிதர்கள் வீடு, கம்பிளி, ஹீட்டர் என தங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டிருக்கும் நிலையில், பல நேரங்களில் விலங்குகள் குளிரைத் தாங்க முடியாமல் உயிரை இழக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான குளிர் நிலவும் சூழ்நிலையில், நாய்க் குட்டிகள் குளிர் காய தீ மூட்டியவர் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, தீ மூட்டிய நபரை சமூக வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
அம்மானா சும்மாவா? குட்டி எலிக்காக பாம்பை பந்தாடிய தாய் எலி
ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல விஷயங்களை செய்கிறாள். அவர்களுக்காக உலகின் அனைத்து துக்கங்களையும், வலிகளையும் தான் தாங்கிக்கொள்கிறாள். ஒரு தாய் தன் குழந்தைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த வீடியோ. இதில், ஒரு எலி, தனது குழந்தையாகிய குட்டி எலியைக் காப்பாற்ற ஒரு பெரிய விஷப்பாம்புடனும் போராடுகிறது.
சாலையோரத்தில் இருக்கும் பாம்பு (Snake Video) ஒன்று, ஒரு எலி குட்டியை வாயில் கவ்விக்கொண்டு வேகமாக செல்வதை வீடியோவில் காண முடிகின்றது. குட்டி எலியைக் காப்பாற்ற, தாய் எலி, பாம்பின் வாலை தொடர்ந்து தாக்குகிறது. அது பாம்பின் வாலை தொடர்ந்து கடிக்கிறது. தாய் எலியின் உறுதிக்கு முன்னால் பாம்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, குட்டி எலியை விட்டுவிட்டு, பாம்பு திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடிக்கின்றது.
மனிதனை அரவணைக்கும் குரங்கு!!
குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்கிற பழமொழி காலங்காலமாக சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக மனிதனுக்கும் குரங்கிற்கும் இடையேயான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.
வைரலாகி வரும் இந்த வீடியோவில் (Viral Video), விடுமுறையை மெக்சிகோவில் ஒரு குடும்பம் கழிக்கிறது. அங்கு ஒரு குரங்கு பால்கனியில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவரின் கைகளுக்கு நேராக ஏறி அவர் மீது அமர்கிறது. அந்த குரங்கு அவரின் மார்பின் மீது சாய்ந்து கொண்டு உறங்குகிறது. அவரும் அதை குழந்தையை போல தடவி கொடுத்து அரவணைப்பாக வைத்திருக்கிறார். இந்த காட்சி இணையவாசிகளை இளகவைத்துள்ளது.
ALSO READ | மான் குட்டியை காப்பாற்ற ஹீரோவாக மாறிய நாய்! வைரலாகும் வீடியோ!
ALSO READ | என் தேவதை வந்துட்டா!! தேம்பி அழுத மாப்பிள்ளை, தேற்றிய மணப்பெண், வைரலான வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR