அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமால், கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற நாளை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். தீபாவளி அன்று வீட்டில் உள்ள அனைவரும் அதிகாலையில் எழுந்து, எண்ணெய்க் குளியல் மேற்கொண்டு, புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வது வழக்கம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தீபாவளித் திருநாளை பொதுமக்கள் குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


அதிகாலை முதலே பட்டாசு வெடிசத்தத்தால் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மத்தாப்பு, சங்கு சக்கரம், பூத்தொட்டி, ராக்கெட் உள்ளிட்ட வெடிகளை வெடித்து தீபாவளி பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அமெரிக்க பெண்களின் அசத்தல் நடனக்காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. தீப ஒளித்திருநாள் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டத்தில், சத்யமேவ ஜெயதே என்ற பாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தில்பார்' என்ற பாடலுக்கு அமெரிக்க பெண் நடன கலைஞர்கள் அசத்தல் நடனம் ஆடியுள்ளனர்.



பாரம்பரியமான இந்திய உடைகளை அணிந்து, அவர்கள் ஆடிய நடனக்காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டு தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.