பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக செயல் தலைவர் நட்டா ஆகியோர் தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் செப்., 17 அன்று பிரதமர் மோடியின் 69-வது பிறந்த நாள் வருகிறது. அதனை முன்னிட்டு பாஜக சார்பில், நாடு முழுவதும் செப்., 14 முதல் 20 வரை, ஒரு வாரம் சேவா சப்தா( சேவை வார பிரசாரம்) ஆக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷா, பாஜக செயல் தலைவர் நட்டா இணைந்து தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன்ன பாஜக மூத்த நிர்வாகிகள் விஜய் கோயல், விஜேந்தர் குப்தா ஆகியோரும் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு பழங்கள் வழங்கி, அவர்களின் உடல்நலனை கேட்டறிந்தனர்.



இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடன் பேசிய அமித்ஷா தெரிவிக்கையில்., நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள், சேவை வார பிரசாரம் மேற்கொள்வார்கள். நாட்டிற்காகவும், ஏழை மக்களுக்காகவும் பணியாற்ற பிரதமர் மோடி, தன்னை அர்ப்பணித்துள்ளார். இதனால், சேவை வாரமாக கொண்டாடுவது சரியாக இருக்கும் என தெரிவித்தார்.


உத்திர பிரதேச மாநிலம் ஹாமிர்பூரில், பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பாஜக மாநில தலைவர் சுவந்திர தேவ் சிங் மற்றும் மாநில அமைச்சர்கள் அசோக் கத்தாரியா, ரன்வீந்திர பிரதாப் சிங் ஆகியோர் இணைந்து தெருக்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.