ராட்சத தந்தத்துடன் தாக்க வந்த காட்டு யானை; கூலாக வண்டியை ஓட்டிய ஓட்டுநர்; வைரல் வீடியோ
வனப்பகுதியில் சுற்றுலா சென்றவர்களை ராட்சத தந்தத்துடன் காட்டு யானை தாக்க வந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வனப்பகுதிக்குள் வேன் மூலம் சுற்றுலாப் பயணிகள் சென்று வன விலங்குகளை பார்க்கலாம். முறையான அனுமதி மற்றும் பணம் செலுத்தி வனப்பகுதிக்குள் சுற்றுலா செல்லலாம். அவ்வாறு சுற்றுலா சென்றவர்களை காட்டு யானை ஒன்று ராட்ச தந்தத்துடன் தாக்க வேகவேகமாக ஓடி வருகிறது. அப்போது, சுற்றுலா பயணிகளை வாகனத்தில் அழைத்துச் சென்ற ஓட்டுநர், துளியும் பயப்படவில்லை. மாறாக, யானை தாக்க வரும்போது வாகனத்தை பின்நோக்கி இலகுவாக இயக்குகிறார்.
மேலும் படிக்க | பேருந்தில் குதிரை போஸ்டர்; தாய் என நினைத்து பின் சென்ற குதிரை குட்டி!
வண்டி ஓட்டுவதில் சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கக்கூடும். ஆனால், வண்டியை பின்னோக்கி சர்வ சாதரணமாக ஓட்டி அனைவரையும் பத்திரமாக பாதுகாத்துள்ளார். துரத்தி வந்த யானை மீண்டும் வனப்பகுதிக்குள்ளேயே ஆக்ரோஷமாக ஓடி விடுகிறது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த பலரும் அந்த ஓட்டுநரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். வண்டியில் உள் பகுதியில் இருக்கும் சென்டர் கண்ணாடியை பார்த்துக் கொண்டு, யானை துரத்தி வரும் வேகத்தையும் பார்த்து அசாத்தியமாக வண்டியை இயக்கியுள்ளார் என பாராட்டியுள்ளனர்.
இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பாளரான ஆனந்த் மகேந்திராவும், அவரை வெகுவாக டிவிட்டரில் பாராட்டியிருக்கிறார். யானையின் தாக்குதலில் இருந்து பத்திரமாக வாகனத்தை ஓட்டிய அவர் தான் சிறந்த ’கேப்டன் கூல்’ என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ கபினி வனப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வண்டியை பிரகாஷ் என்பவர் ஒட்டியிருக்கிறார்.
மேலும் படிக்க | Viral Video: ராஜ நாகத்தை வேட்டையாட துடிக்கும் கழுகு; காட்டில் நடக்கும் போராட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ