Viral Video: ராஜ நாகத்தை வேட்டையாட துடிக்கும் கழுகு; காட்டில் நடக்கும் போராட்டம்!

உயிரை காப்பாற்றிக் கொள்ள நடக்கும் போராட்டங்கள், சில சமயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன, சில சமயம் அதிர்ச்சிகளையும் கொடுக்கின்றன. சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 12, 2022, 08:46 PM IST
  • கழுகு ஒன்று ராஜ நாகத்தை தாக்க முயலுகிறது.
  • நாகப்பாம்பும் உடனடியாக படம் எடுத்து தாக்க தயாராகிறது.
  • கழுகும் தாக்குதலுக்கு முழுமையாக தயாராகிவிட்டது.
  • இரண்டுக்கும் இடையே நீண்ட நேரம் கடும் சண்டை நடக்கிறது.
Viral Video: ராஜ நாகத்தை வேட்டையாட துடிக்கும் கழுகு;  காட்டில் நடக்கும் போராட்டம்!  title=

இணையத்தில் எண்ணிலடங்கா வீடியோக்கள் அனுதினமும் பகிரப்படுகின்றன. அதில விலங்ககுளுக்கு இடையிலான போராட்டம் தொடர்பான வீடியோக்கள் மிகவும் வைரலாகும். உயிரை காப்பாற்றிக் கொள்ள நடக்கும் போராட்டங்கள், சில சமயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன, சில சமயம் அதிர்ச்சிகளையும் கொடுக்கின்றன. சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அந்த வகையில், ராஜ நாகத்திற்கு கழுகிற்கும் இடையிலான போராட்டம்  தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

பாம்புகள் மிகவும் ஆபத்தான உயிரினங்கள். இவைகளை சீண்ட யாருக்கும் தைரியம் வராது.  பாம்புகளை கண்டால் படையும் நடுங்கும் என்றாலும், வைரலாகி வரும் இந்த காணொளியில் கழுகு ஒன்று ராஜ நாகம் ஒன்றை அச்சமின்றி தாக்கி இரையாக்க துடிப்பதைக் காணலாம்.காட்டு விலங்குகளான சிங்கம், சிறுத்தை, புலி மற்றும் முதலை போன்ற வேட்டை விலங்குகள் ஒருமுறை இரையைப் பிடித்தால், தப்பிப்பது மிகவும் கடினம். ஆனால்  ராஜ நாகப்பாம்புக்கும் கழுகுக்கும் இடையே சண்டை நடப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? ராஜ நாகப்பாம்பும் கழுகும் நேருக்கு நேர் மோதிய  அதிர்ச்சி வீடியோ தற்போது  வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோவைக் கீழே காணலாம்:

கழுகு ஒன்று ராஜ நாகத்தை தாக்க முயலுகையில், நாகப்பாம்பும் உடனடியாக படம் எடுத்து தாக்க தயாராகிறது. கழுகும் தாக்குதலுக்கு முழுமையாக தயாராகிவிட்டது.  இரண்டுக்கும் இடையே நீண்ட நேரம் கடும் சண்டை நடக்கிறது. ஆனால்ம் இறுதிவரை கழுகின் முயறசி பலிக்கவில்லை. இதில் கழுகு, ராஜ நாகத்தை இரையாகக் கருதி தவறு செய்து விட்டது. இறுதியில், அமைதியாக நழுவ வேண்டியிருந்தது. இந்த அதிர்ச்சி வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கானோர் பார்த்துள்ளனர். இது Latest Wildlife Sightings என்ற பெயரில் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க |  Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News