அமெரிக்காவின் ஜார்ஜிய மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் சிலநாட்களுக்கு முன்னர், பணமழை பெய்தது சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்ஜிய மாகாணத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களில் பலர் ஆச்சர்யமடைந்ததுடன் நிறுத்திக்கொள்ளாமல் அந்த பணத்தை எடுத்துச்செல்லவும் செய்துள்ளனர்.


இந்த விஷயம் அங்கிருந்த காவல்துறைக்கு செல்ல அவர்கள் விசாரணையில் களமிறங்கினர். அப்போதுதான் தெரிந்தது, அவ்வழியாக சென்ற ஒரு ட்ரெக்கிலிருந்து பணம் சிதறியுள்ளது என. இந்த நிகழ்வில் பறிபோனது மொத்தம் 1,75,000 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 1 கோடியே 20 இலட்சம். தொடர்ந்து இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.



இதற்கிடையில் இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக துவங்கியது. இந்த சம்பவம் குறித்த வீடியோ மூலம் பார்த்து தெரிந்துக்கொண்ட இணையவாசிகள் நம் ஊரில் இதுபோல் நடக்காதா? என ஏக்கத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி டன்வூடி காவல்துறையினரிடம் இதுவரை 5 பேர் பணத்தை மீண்டும் ஒப்படைத்துள்ளதாகவும், 1,75,000 டாலர்களில் சுமார் 4,400 டாலர்கள் திரும்ப வந்துள்ளதாக தெரிகிறது. மீட்கப்படாத பணங்களை வரிசை எண் கொண்டு மீட்கும் பணியில் காவல்துறை ஈடுப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.