அருள்நிதி நடிப்பில் வெளியாகும் "இரவுக்கு ஆயிரம் கண்கள்" திரைப்படத்தின் "யேப்பா யப்பப்பா" பாடல் ட்விட்டரில் ட்ரண்ட் ஆகி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிருந்தாவனம் படத்திற்கு பிறகு அருள்நிதி நடித்துவரும் திரைப்படம் "இரவுக்கு ஆயிரம் கண்கள்". இப்படத்தை மு.மாறன் இயக்குகிறார், இவர் கே.வி.ஆனந்த் - அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படத்தில் அருள்நிதி மற்றும் மகிமா நம்பியார் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். மேலும், ஆனந்தராஜ், அஜ்மல், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சுஜா வருநீ, சாயா சிங், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர். 


இந்நிலையில் தற்போது இப்படத்தின் "யேப்பா யப்பப்பா" மியூசிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியுட்டுளனர். இப்பாடல் குறித்த ட்விட்டுள்ளக்ள் தற்போது ட்விட்டரில் ட்ரண்ட் அடித்து வருகிறது!



க்ரைம் த்ரில்லர் பானியில் உருவாகி வரும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.