அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்திலும் ‘அருவி’ படத்தில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்த ரேமண்ட் படத்தொகுப்பாளராக பணிபுரியவிருக்கிறார். இந்தப் படத்திற்கு ‘மேயாத மான்’ படத்தின் இசை அமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் குமார் இசை அமைக்கிறார்.


இந்தப் படத்தின் தொடக்கவிழா குமுளி அருகில் உள்ள நோஸ்ரம் மையத்தில் நேற்று நடந்துள்ளது. இந்த விழாவில் 24 ஏம்.ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், படத்தொகுப்பாளர் ரேமண்ட்,பேராசிரியர் ராஜநாயகம், பாவலர் அறிவுமதி ஆகியோர் கலந்துகொண்டனர்.


 



 


விரைவில் படத்தில் நடிக்கப்போவது யார் எப்போது படப்பிடிப்பு போன்ற 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவத்தின் டிவிட்டார் வெளியிடப்படும்.