தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி திரைப்படத்தில் நடித்துள்ள அரவிந் சாமி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெ-வாக நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தலைவி. இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி புகழ்பெற்ற அரசியல்வாதி எம்.ஜி.ராமச்சந்திரன் கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார். MGR பாத்திரம் ஏற்க தாடி, மீசையை எடுத்துள்ள அரவிந்த் சாமியின் புகைப்படம் தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. அரவிந்த் சாமியின் இந்த அற்புதமான மாற்றம் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.


மறைந்த நடிகர்-அரசியல்வாதி MGR-ஐ பற்றி குறிப்பிடப்படாமல் ஜெயலலிதா ‘வாழ்க்கையை மறுபரிசீலனை செய்வது முழுமையடையாது, ஏனெனில் ஜெயலலிதா-வின் அரசியல் பிரவேசம் துவங்கி தமிழ்நாட்டின் முதல்வர் ஆகும் வரை அவர் ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டிருந்தார்.


திரைப்படங்களை பொருத்தவரையில் MGR மற்றும் ஜெயலலிதா இணைந்து 1965 மற்றும் 1973-க்கு இடையில் சுமார் 28 பாக்ஸ் ஆபிஸ் படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளனர். 


கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி., MGR-ன் கதாப்பாத்திரத்தை நியாயப்படுத்து தேவையான ஒரு நடிகருக்கு படக்குழுவினர் தேடுதல் வேட்டை நடத்துகையில் அரவிந் சாமியை அவர்கள் தேர்ந்தெடுத்ததாக தெரிகிறது.  மற்றொரு புறம் பார்க்கையில் MGR இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். அந்த வகையில் அரவிந்த் சுவாமி MGR-ன் பாத்திரத்தை ஏற்று நடிக்க பொறுத்தமானவர் என தயாரிப்பாளர்கள் நம்பியுள்ளனர்.


கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த் சாமி நடித்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தினை பாகுபலி எழுத்தாளர் கே.வி. விஜயேந்திர பிரசாத் மற்றும் ரஜத் அரோரா இணைந்து எழுதியுள்ளனர். பாகுபலி தொடர் மற்றும் பஜ்ரங்கி பைஜான் போன்ற வெற்றி கதைகளை எழுதியவர் கே.வி.விஜயேந்திர பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.



தலைவி திரைப்படம் விஷ்ணு வர்தன் இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர் சிங் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது. ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய பிரபல ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ், பிளேட் ரன்னர் மற்றும் கேப்டன் மார்வெல் இத்திரைப்படத்தில் பங்கெடுத்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. மேலும் இது மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.


அரவிந்த் சுவாமி ஒரு நடிகராக மணிரத்னம் இயக்கிய தலபதி திரைப்படத்தில் அறிமுகமானார். அவரது பிரபலமான திரைப்படங்கள் ரோஜா, பம்பாய், மின்சாரா கனவு, தனி ஓருவன், போகன் மற்றும் செக்க சிவந்த வானம் போன்றவைகள் ஆகும்