Video: அடேங்கப்பா!... கிரிக்கெட்டில் இப்படியும் ஒரு விதி இருக்கா?
ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் பிக் பாஷ் லீக் போட்டியில், பேட்ஸ்மேன் அடித்த பந்து மேல்கூறையில் தட்டி கீழே விழுந்ததால் 6 ரன் அளிக்கப்பட்டுள்ளது!
ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் பிக் பாஷ் லீக் போட்டியில், பேட்ஸ்மேன் அடித்த பந்து மேல்கூறையில் தட்டி கீழே விழுந்ததால் 6 ரன் அளிக்கப்பட்டுள்ளது!
இந்தியாவில் நடைபெறும் IPL டி20 கிரிக்கெட் போட்டிகளை போல, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு சீசனின் 2-வது லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணி, 19 ஓவர்களுக்கு 103 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் அணி களமிறங்கியது. பரபரப்பாக சென்ற இப்போட்டியின் 15.2-வது பந்தில் மெல்போர்ன் அணி 107 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கிடையில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் பேட்டிங்கின்போது, 12-வது ஓவரை மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணியின் டேனியல் கிறிஸ்டியன் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிரணி வீரர் ஆஷ்டன் டர்னர் தூக்கியடிக்க, பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டு கீழே விழுந்தது.
சுமார் 28 மீட்டர் தூரத்தில் கீழே விழுந்த இந்த பந்திற்கு கள நடுவர் 6 ரன்கள் அளித்தார். இதனால், ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.
மெல்போர்ன் மைதானத்தின் மேற்கூரை மூடப்பட்டபோது, பேட்ஸ்மேன் அடிக்கும் பந்து 38 மீட்டர் உயரம் கொண்ட மேற்கூரையில் பட்டால் சிக்சர் கொடுக்க வேண்டும் என்பது மைதானத்தின் விதிமுறையாக உள்ளது. இதன் காரணமாக தான் 6 ரன்கள் அளிக்கப்பட்டுள்ளது.