VIRAL Video: அஸ்வினின் சதமும், முகமது சிராஜின் கொண்டாட்டமும்…
அஸ்வினின் அற்புதமான சதத்திற்கு முகமது சிராஜின் மகிழ்ச்சி ஆரவாரக் கொண்டாட்டம் நெட்டிசன்களின் இதயங்களை வென்றது, அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
சென்னை: அஸ்வினின் அற்புதமான சதத்திற்கு முகமது சிராஜின் மகிழ்ச்சி ஆரவாரக் கொண்டாட்டம் நெட்டிசன்களின் இதயங்களை வென்றது, அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
அஸ்வின் தனது சதத்தை முடிக்க ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டபோது, பந்தை பவுண்டரி நோக்கி செல்வதைக் கண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சிராஜ், தற்போது ரசிகர்களின் விருப்பமான வீரராக மாறிவிட்டார்.
Also Read | சென்னை சேப்பாக்க மைதானத்தில் 'விசில் போடு' விராட் கோலியின் கொண்டாட்டம்
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, தனது ஆருயிர் தந்தையை இறந்தாலும், அவரது கனவை நிறைவேற்றுவதற்காக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இருந்து விலகாமல் போட்டிகளில் கலந்துக் கொண்டார் சிராஜ்.
அதுமட்டுமல்ல, இனரீதியான துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டது, முதல் ஐந்து விக்கெட்டுகள் என்ற அபார சாதனையை பதிவு செய்தது என பார்டர்-கவாஸ்கர் தொடரின் வெற்றி நாயகனானார் முகமது சிராஜ்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் பேட்டிங்கின் இரண்டாவது இன்னிங்சில், திங்களன்று நடந்த மற்றொரு மனதைக் கவரும் சம்பவத்தில் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் மீண்டும் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளைக் கொண்டார். ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை அடிக்கும்ப்போது, அவருடன் களத்தில் இருந்தார் சிராஜ்.
Also Read | IND vs ENG 2nd Test: சென்னை ரசிகர்களின் உற்சாகத்துடன் இந்தியா வெல்லுமா
அஸ்வினின் பந்து பவுண்டரி நோக்கி சென்ற நொடியில், மகிழ்ச்சி பொங்க பல முறை துள்ளி குதித்தார் சிராஜ். தானே சதம் அடித்தது போல மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வெள்ளை உள்ளத்திற்கு மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல, பிற கிரிக்கெட் வீரர்களும் நெகிழ்ந்தனர்.
அஸ்வின் தனது 5 வது டெஸ்ட் சதத்தை அடித்தார். கிட்டத்தட்ட 5 வருட கால இடைவெளியில் மூன்று இலக்க ஸ்கோரை எடுத்த அஸ்வினின் மட்டையே, இந்தியா வலுவான இடத்தை பிடிக்க உதவியது.
Also Read | விளையாட்டு வீராங்கனை Jwala Gutta சந்தித்த Racism; மனிதர்களின் நிறங்கள்…
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR