நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஆசியா கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் மோதின. இதில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இந்திய-பாகிஸ்தான் போட்டி என்றாலே இரு நாடுகளின் கோடிக்கணக்கான பார்வையாளர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருப்பது வழக்கம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோரின் சதத்தின் உதவியோடு இந்திய அணி 39.3 ஓவர்களில் 238 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


 



இந்த வெற்றியுடன், இந்திய வீரர் அம்பத்தி ராயுடுவின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள் இந்திய கிரிக்கெட் அணி. இதில் முன்னால் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராயுடுவின் முகத்தில் கேக்கை பூசினார். பின்னர் இந்த கொண்டாத்தின் போது இந்திய இளம் வீரர் கேதர் ஜாதவ் நடனம் ஆடினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.