AsiaCup2018: தோனி டக்-அவுட் ஆனது ஆத்திரம் வருது மக்களே...Video
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை போராடி வெற்றி கொண்டது இந்திய அணி.
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை போராடி வெற்றி கொண்டது இந்திய அணி.
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங்காங் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹாங் காங் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹாங்காங் அணிக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதைத்தொடர்ந்து ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஹாங்காங் அணியை இன்று எதிர்கொண்டது. இந்த போட்டியில், முதலில் விளையாடிய இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து களம் இறங்கிய ஹாங்காங் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம், 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனினும், இந்தியாவின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, நேற்று நடைப்பெற்ற போட்டியில் டக்-அவுட்டாகி வெளியேறினார். இதனால், ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் நேற்று இந்தியா, ஹாங்காங் இடையிலான போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா தடுமாறி தான் வெற்றி பெற்றது. இந்திய அணி ஒரு கத்துக்குட்டி அணிக்கு எதிராகவே இப்படி தடுமாறியதை கண்டு ரசிகர்கள் கொதித்துப் போய் உள்ளனர். போட்டி நடைப்பெற்று கொண்டிருந்த போது, முதல் இரண்டு பந்துகளை எதிர்க்கொண்ட தோனி, ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. இதனால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர், ஹாங்காங்கின் எஹ்சான் கானின் பந்தில், தோனி டக்-அவுட் ஆனதால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக, இளம் ரசிகர் ஒருவர் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது
இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி வேறு உள்ளது. நேற்று இந்தியாவில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோனி ரன் ஏதும் அடிக்காமல் வெளியேறினார். அவரை ட்விட்டரில் ஒரு சிலர் விமர்சித்தும், ஒரு சிலர் அவர் அடுத்த போட்டியில் அடிப்பார் என ஆறுதல் கூறியும் வருகின்றனர்.