ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இறுதி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 3 ஆம் தேதி துவங்கி நடைப்பெற்று வருகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. முதல் நாளில் மயங்க் அகர்வால் மற்றும் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆடிய இந்திய அணி, இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்த பூஜார 193(373) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 


பின்னர் ரிஷாப் பன்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடி ரிஷாப் பன்ட் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 2-வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் ரவீந்திர ஜடேஜா தனது 10-வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 81(114) ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனர். அதேவேளையில் ரிஷாப் பன்ட்* 159(189) ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். அப்பொழுது இந்திய அணியின் ஸ்கோர் 622 ரன்கள் இருந்தது போது, இந்திய கேப்டன் விராட் கோலி, முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்துக் கொள்வதாக அறிவித்தார்.


இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, இரண்டாம் நாள் ஆட்டம் நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களான மார்கஸ் ஹரிஸ்* 19(29), உஸ்மான் குவாஜா* 5(31) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


இந்திய வீரர் ரிஷாப் பன்ட் பேட்டிங் செய்துக்கொண்டு இருக்கும் போது, ஓவரின் நடுவில் பல்ட்டி அடித்து எழுந்ததை "Not Bad" என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வீடியோவை பகிர்ந்துள்ளது. பார்க்க வீடியோ......!