இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உணவுப் பொருட்களும், எரிபொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் ஒரு வேளை உணவுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். எரிபொருட்கள் இல்லாததால் நாட்கள் கணக்கில் பெட்ரோல் நிலையங்கள் முன்பு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நிற்கின்றனர். ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக மக்கள் பல மாதங்களாக வீதியில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அதிபர் பதவியில் இருந்து விலக மறுத்துவிட்ட கோத்தபய ராஜபக்ச, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும் மக்களின் இயல்பு வாழ்க்கை, பரிதாபத்துக்குரியதாகவே இருக்கிறது. இலங்கையில் இந்த நிலைமை சரியாக இன்னும் 2 ஆண்டுகள் கூட ஆகலாம் என கூறப்படுகிறது. இவ்வளவு வேதனைக்கும் நடுவே அந்நாட்டில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. பெட்ரோல் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோக்காரர் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு நடனமாடுகிறார். குஷியாக அவர் போடும் ஆட்டம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 



காதலன் படத்தில் வரும் முக்காலா முக்காப்புலா பாடலுக்கு தான் அவர் நடனமாடுகிறார். பாடலின் ஒலிகளுக்கு ஏற்ப அவர் ஆடும் நடனம் காண்போரை வெகுவாக ரசிக்க வைக்கிறது. பாடலின் மெட்டுக்கு ஏற்ப அசைவுகளையும் அவர் மாற்றுகிறார்.  மீனா என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இதுவரை இந்த வீடியோ சுமார் 40 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அவர் நடனத்தைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ள நெட்டிசன்கள், இந்த வயதில் இப்படி நடனமாடுவது உண்மையிலேயே தனித்திறமை வேண்டும் எனவும் கூறியுள்ளனர். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR