குதூகலமான குளியல் போட்ட குட்டி யானை! வைரலாகும் வீடியோ
குட்டியானை ஒன்று அதன் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்பொழுது கால்களை உதைத்துக்கொண்டு குறும்புத்தனம் செய்யும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மனிதரை போல அதிக ஆண்டுகள் பூமியில் வாழும் ஒரு உயிரினம் யானை. காட்டிற்கு ராஜாவான சிங்கத்தை விட வலிமையான விலங்கு யானை ஆகும். ஆண் யானை களிறு என்றும், பெண் யானை 'பிடி' என்றும், யானையின் குட்டி 'கன்று' என்றும் அழைக்கப்படுகிறது. எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை நாம் தொந்தரவு செய்யாதவரை அவை நமக்கு எவ்வித தீங்கையும் விளைவிக்காது. யானைகள் பார்ப்பதற்கு பயமாக இருந்தாலும், அதன் செயல்கள் இனிமையாக இருக்கும், அதிலும் குறிப்பாக யானைக்குட்டிகள் செய்யும் குறும்புத்தனங்கள் பார்ப்பதற்கு ரசிக்கும்படியாக இருக்கும். அதுபோல இங்கு ஒரு குட்டியானை செய்யும் செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
மேலும் படிக்க | பாத்ரூமில் ஷாம்பு இருக்கலாம். பாம்பு இருக்கலாமா? வைரல் வீடியோ
இந்த வைரல் வீடியோவானது மொரிஸா ஸ்ச்வார்ட்ஸ் என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் பெரிய யானை ஒன்று நின்று கொண்டிருப்பதையும், அதனருகில் குட்டியானை ஒன்று படுத்திருப்பதையும் காண முடிகிறது. குட்டி யானை படுத்திருக்கும் தரை முழுவதும் வைக்கோல் கூளங்களால் நிரம்பியிருக்கிறது. அதனையடுத்து குட்டியானையை குளிக்க வைக்கும் நோக்கில் அதன் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது, அப்போது அந்த யானை கடலில் கடற்கன்னிகள் எவ்வாறு அதன் வாளால் தண்ணீரை விலக்குமோ அதேபோல யானையும் தனது கால்களை பயன்படுத்தி தன் மேலும் விழும் தண்ணீரை விலக்குகிறது. பின்னர் துள்ளி குதித்து எழும் குட்டியானை மீண்டும் கால்களை உதறிக்கொண்டு குறும்பு செய்கிறது.
இந்த காட்சி பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை எழுபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவுடன் 'இவள் முன் ஜெனமத்தில் கடற்கன்னியாக இருந்திருப்பாள்' என்கிற கேப்ஷனும் சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு பலரும் இதய எமோஜிகளையும், சிரிப்பு எமோஜிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | அதிசய விளக்கும் சேட்டை அணிலும் - வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR