ஏய்... நீ வாடா சண்டைக்கு வாடா! வலிக்காமல் க்யூட்டாக சண்டை போடும் யானைக் குட்டிகள்!
யானை குட்டிகள் செல்ல சண்டைப்போடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
யானை, சிங்கம், சிறுத்தைகள், புலிகள் போன்ற விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் எக்கச்சக்கமாக நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக யானைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
அந்த வகையில், அவற்றின் யானை குட்டிகளின் சேட்டைகள், தாய் தந்தை யானைகள் அதன் குட்டிகளை பாதுகாப்பது, குடும்பமாக வாழும் யானை கூட்டத்தின் செயல்பாடுகள் போன்றவை அடிக்கடி வைரலாகும்.
இந்நிலையில், யானை குட்டிகளின் செல்ல சண்டை வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கென்யாவின் ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை (Sheldrick Wildlife Trust) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு நாள்களுக்கு முன்னதாக அந்த வீடியோவை பதிவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | பாகனிடம் பாசமழை பொழியும் கியூட் யானை: வீடியோ வைரல்
முதலில் தரையில் அமர்ந்திருக்கும் யானையின் பெயர் ரோஹோ என்றும், அதுதான் அந்த சிறு வனப்பகுதியின் முடிசூட்டிய மன்னன் என்றும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த பதிவில்,"தனது ராஜியத்தில் கம்பீரமாக உட்கார்ந்துள்ள ரோஹோவுடன் எசோயிட் மற்றும் தாபு ஆகியோர் சேர்ந்து விளையாடுகின்றனர்.
அவர்கள் இருவரும் ரோஹோவுடன் சிறியவர்கள். சண்டைப்போட்டு தங்களின் அன்பை பரிமாறிக்கொள்கின்றனர்.
ரோஹோ அமைதியாக இருந்து, அந்த இரண்டு பேரின் பலத்தை சோதித்து பார்த்து, அவர்களை ஆதிக்கம் செலுத்த விடுவதை காணும்போது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. எங்களின் குட்டி ராஜா முதிர்ச்சியடைந்து வருகிறான், பாசமானவனாக" என்றும் மனமுறுகி தெரிவித்துள்ளனர்.
தற்போது பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வரும் நிலையில், 21 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த லைக் செய்துள்ளனர். மேலும், 1.1 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டியுள்ளனர். தொடர்ந்து, பலரும் தங்களின் அன்பான வார்த்தைகளை பதிவிட்டு வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ