தாக்கா: பங்களாதேஷ் நாட்டில், கொட்டும் மழையில் முத்தமிட்டுக் கொண்டிருந்த காதலர்களை புகைப்படம் எடுத்த பத்திரிக்கையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பங்களாதேஷ் நாட்டில் பிரபல பத்திரிக்கை ஒன்றில் புகைப்பட பத்திரிக்கையாளராக பணியாற்றி வருபவர், ஜிப்பான் அஹமத். இவர் கடந்த வியாழன் அன்று தாக்கா பல்கலை., வளாகத்தில் மழையின கோர தாண்டவத்தினை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு அமர்ந்திருந்த காதல் ஜோடி மழையில் அமர்ந்து முத்தம் இட்டுக்கொண்டுள்ளனர். இந்த காட்சியை தற்செயலாக படம் பிடித்த ஜிப்பான் அஹமத் தனது முகப்புத்தகத்தல் பதிவேற்றியுள்ளார்.


இந்த புகைப்படத்தை பதிவேற்றியதற்காக அவர பணிபுரிந்து வந்த நிறுவனம் அவர்ரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. நீக்கத்திற்கான காரணம் குறித்து கேட்கையில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை என ஜிப்பான் அஹமத் தெரிவித்துள்ளார்..



இதுகுறித்து ஜிப்பான் அஹமத் தெரிவிக்கையில்.. இந்த புகைப்படத்தினை எடுக்க சம்பந்தப்பட்ட காதலர்கள் கூட மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் என் நிறுவனம் எந்த காரணமும் தெரிவிக்காமல் என்னை பணியில் இருந்து நீக்கியது வேதனையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இஸ்லாமிய நாடாட பங்களாதேஷில் பெண்கள் வெளியே வருவதற்கு கூட கட்டுப்பாடுகள் உண்டு, இந்நிலையில் கட்டுப்பாடுகளை மீறி ஒரு பெண் தன் காதலுருடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட அனுமதித்தது அந்நாட்டு இளைஞர்களிடன் வரவேற்பினை பெற்றுள்ளது.